ஐரோப்பா செய்தி

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 100 அவது பிறந்த நாள் – மன்னர் வெளியிட்ட காணொளி

  • April 21, 2026
  • 0 Comments

மறைந்த தனது தாயான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 100 அவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பொதுச் சேவை வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் மன்னர் சார்லஸ் விசேட காணொளிச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். உலகின் தற்போதைய நிலையைத் தனது தாய் நிச்சயம் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் என்றும் மன்னர் எச்சரித்தார். நாம் இப்போது வாழும் இந்தக் காலகட்டத்தைப் பற்றிய பல விடயங்கள் அவரை மிகவும் கவலையடையச் செய்திருக்கக்கூடும் என்றும் தான்சந்தேகிக்கிப்பதாகவும் மன்னர் கவலை வெளியிட்டுள்ளார். ஆனால் மன்னர் உள்நாட்டு அல்லது […]

ஐரோப்பா

நீண்ட கொவிட் தொற்றுடன் போராடும் பிரித்தானியர்கள் – மருத்துவர்கள் அவசர எச்சரிக்கை!

  • April 21, 2026
  • 0 Comments

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் பிரித்தானிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீண்ட கோவிட் நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதை நிபுணர்கள் “மறக்கப்பட்ட பெருந்தொற்று” என்று விவரித்துள்ளனர். கொரோனா வைரஸின் அறிகுறிகள் 12 வாரங்களுக்கு மேல் நீடிக்கும்போது இந்நிலை ஏற்படுகிறது. மூளை மந்தம், மூச்சுத்திணறல், மூட்டு மற்றும் தசை வலி ஆகியவை நீண்ட கொவிட் தொற்றின் அறிகுறிகளாகும். மேலும், கோவிட் வைரஸ் உலகளவில் தொடர்ந்து பரவி வருவதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

உலகம்

போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாது – ட்ரம்ப் அறிவிப்பு!

  • April 21, 2026
  • 0 Comments

போர் நிறுத்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நாளைய தினத்துடன் தற்போது அமுலில் உள்ள போர் நிறுத்தம் காலாவதியாகவுள்ள நிலையில் ட்ரம்பின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில்  CNBC ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,  “ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்தால், அவர்களால் மிகவும் நல்ல நிலையை அடைய முடியும்.  பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர ஈரானிய அதிகாரிகளுக்கு “வேறு வழியில்லை” என்று  குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தைகளில் பங்குக்கொள்ள ஈரான் சார்பில் […]

செய்தி

செம்மணி மனித புதைகுழி: ஐரோப்பிய குழுவின் கண்காணிப்பு விஜயம் ஒத்திவைப்பு!

  • April 21, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று (21) பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. எனினும், தற்போது களத்தில் அகழ்வுப் பணிகள் நடைபெறாத காரணத்தால், இன்று அவர்கள் வருகை தரவில்லை. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளான வி.எஸ். நிரஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோர் […]

பொழுதுபோக்கு

இலங்கையில் சூர்யா! ரசிகர்கள் உற்சாகம்

  • April 21, 2026
  • 0 Comments

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சூர்யா மற்றும் பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். எவ்வித முன்னறிவிப்புமின்றி இவர்களின் வருகை அமைந்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர விருந்தகத்தில் எடுக்கப்பட்ட இவர்களின் படங்கள் மற்றும் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இலங்கை செய்தி

கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்

  • April 21, 2026
  • 0 Comments

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்தை இன்று (21) வந்தடைந்தது. இலங்கைக் கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய இந்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த டைவிங் ஆதரவு கப்பல் வகையைச் சார்ந்த இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் சைலேஷ் குமார் தியாகி (Sailesh Kumar Tyagi) செயற்படுகின்றார். குறித்த போர்க்கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இலங்கைக் கடற்படையுடன் இணைந்து கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இதன் மூலம் இரு […]

உலகம் செய்தி

லெபனான் மீதான இஸ்ரேலின் அனைத்து மீறல்களுக்கும் கட்டார் கண்டனம்

  • April 21, 2026
  • 0 Comments

லெபனானின் ஒற்றுமையையும் அதன் இறையாண்மையையும் ஆதரிப்பதாக கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லெபனானின் இறையாண்மை மீதான இஸ்ரேலின் அனைத்து மீறல்களையும் மக்கள் மீதான தாக்குதல்களையும் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பகுதியில் நம் அனைவரையும் ஆபத்தில் ஆழ்த்தி, எரிசக்தி சந்தைகளை அபாயகரமான நிலைக்குத் தள்ளியுள்ள போரை முடிவுக்குக் கொண்டுவரவும் கட்டார் அழைப்பு விடுத்துள்ளது. போர் நிறுத்தம் தொடர கட்டார் எப்போதும் வலியுறுத்தி வருவதாகவும் கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை செய்தி

மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட பஸ் சேவை ஆரம்பம்!

  • April 21, 2026
  • 0 Comments

மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்காக “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட “தாழ்தள” (Low Floor) பஸ் சேவை இன்று (21) மாகும்புர போக்குவரத்து மையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயணிகள் பஸ் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக்கூடிய “LMT GO” எனும் கைபேசி செயலியும் (Application) இதன் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இத்திட்டம் நாட்டின் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்கதொரு முன்னெடுப்பு என்று குறிப்பிட்டார். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர், […]

இலங்கை செய்தி

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் புத்தகங்கள் முடக்கம்: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

  • April 21, 2026
  • 0 Comments

“எனது புத்தகங்களைத் தடுத்து வைத்துள்ளமை அடிப்படை மனித உரிமை மீறலாகும்” என்று தெரிவித்து, ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் , யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்தியாவிலிருந்து எழுத்தாளர் தீபச்செல்வனின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஐந்து வகையான புத்தகங்களின் 360 பிரதிகள், கடந்த மார்ச் 18ஆம் திகதி முதல் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துக்கள் இப்புத்தகங்களில் உள்ளதாகத் தெரிவித்தே இவை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. […]

செய்தி

பாகிஸ்தானின் சமரச முயற்சிக்கு சீனா முழு ஆதரவு!

  • April 21, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் தார் Ishaq Dar மற்றும் சீனத் தூதுவர் ஜியாங் ஜைடாங் Jiang Zaidong ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட பாகிஸ்தான் மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகளை சீன தூதுவர் பாராட்டியுள்ளார்.

error: Content is protected !!