லெபனான் மீதான இஸ்ரேலின் அனைத்து மீறல்களுக்கும் கட்டார் கண்டனம்
லெபனானின் ஒற்றுமையையும் அதன் இறையாண்மையையும் ஆதரிப்பதாக கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
லெபனானின் இறையாண்மை மீதான இஸ்ரேலின் அனைத்து மீறல்களையும் மக்கள் மீதான தாக்குதல்களையும் வன்மையாக
கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பகுதியில் நம் அனைவரையும் ஆபத்தில் ஆழ்த்தி, எரிசக்தி சந்தைகளை அபாயகரமான நிலைக்குத் தள்ளியுள்ள
போரை முடிவுக்குக் கொண்டுவரவும் கட்டார் அழைப்பு விடுத்துள்ளது.
போர் நிறுத்தம் தொடர கட்டார் எப்போதும் வலியுறுத்தி வருவதாகவும் கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.





