ஐரோப்பா செய்தி

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 100 அவது பிறந்த நாள் – மன்னர் வெளியிட்ட காணொளி

மறைந்த தனது தாயான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 100 அவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பொதுச் சேவை வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் மன்னர் சார்லஸ் விசேட காணொளிச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

உலகின் தற்போதைய நிலையைத் தனது தாய் நிச்சயம் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் என்றும் மன்னர் எச்சரித்தார்.

நாம் இப்போது வாழும் இந்தக் காலகட்டத்தைப் பற்றிய பல விடயங்கள் அவரை மிகவும் கவலையடையச் செய்திருக்கக்கூடும் என்றும் தான்சந்தேகிக்கிப்பதாகவும் மன்னர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஆனால் மன்னர் உள்நாட்டு அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு குறிப்பிட்ட கவலைகளையும் வெளிப்படுத்தவில்லை.

பிரித்தானியாவின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் செவ்வாய்க்கிழமை அன்று, மறைந்த மகாராணியின் பாரம்பரிய வெண்கலச் சிலையின் இறுதி வடிவமைப்பு, மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோருக்குக் காண்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Martin Jennings வடிவமைக்கும் இந்தச் சிலை, மகாராணியை அவரது இளமைக் கால தோற்றத்தில் சித்தரிக்கிறது.

மேலும், இந்த நினைவிடத் திட்டத்தில், மகாராணியின் மார்பளவு சிலை மற்றும் இளவரசர் Philip இன் வெண்கலச் சிலையும் இடம்பெறும்.

இதற்கமைய, மகாராணியைப் பற்றிய பொதுமக்களின் நினைவுகளை சேகரிக்கும் டிஜிட்டல் திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இது, அவரின் சேவை மற்றும் பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்கு பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.

தனது உரையில், மகாராணி எலிசபெத் “மாற்றங்கள் மத்தியில் கூட உறுதியுடன் சேவை செய்தவர்” எனக் குறிப்பிட்ட மன்னர், அமைதி, நீதி மற்றும் நம்பிக்கையுடன் கூடிய எதிர்காலத்திற்காக அனைவரையும் ஒன்றிணைய அழைப்பு விடுத்தார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!