உலகம் செய்தி

பிரிக்ஸ் மாநாட்டை புறக்கணிக்கும் பங்களாதேஷ் பிரதமர்?

டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹுமாயூன் கபீர் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹுமாயூன் கபீர் தெரிவித்தார்.

” டெல்லியில் செப்​டம்​பர் 12, 13-ல் நடக்​கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்​டிற்கு பங்களாதேஷ் பிரதமருக்​குத் தனிப்​பட்ட முறையில் அழைப்பு வரவில்​லை. பிம்​ஸ்​டெக் அமைப்​பின் தலை​வ​ராகவே அவருக்கு அழைப்பு வந்துள்​ளது.

இதனால், பிரதமர் தா​ரிக் ரஹ்​மான் இம்​மா​நாட்​டில் பங்கேற்க மாட்​டார். அவருக்​குப் பதிலாக வேறொரு அரசு பிர​தி​நிதி கலந்​து​கொள்ள வாய்ப்​புள்​ள​து.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“நமது பிரதமருக்கு நேரடி அழைப்​பில்​லை. மேலும், அவரது முதல் இந்​தி​யப் பயணம் ஒரு பன்​னாட்டு மா​நா​டாக இருக்க முடி​யாது. தகுந்த சூழல் அமை​யும் போது இருதரப்​புப் பயணம் மேற்​கொள்​ளப்​படும்” என்று கபீர் கூறி​னார்.

கடந்த 2024 ஆகஸ்​டில் பங்களாதேஷ் முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வுக்கு இந்​தியா அரசி​யல் தஞ்சம் அளித்​த​தால் இரு நாடு​களுக்​குமிடையே பதற்​றம் நிலவி வருகிறது.

இருப்​பினும், பிம்​ஸ்​டெக் தலை​வ​ராக பிரிக்​ஸ் சிறப்பு அழைப்​பாளர்​கள் கூட்​டத்​துக்கு ரஹ்​மானுக்கு அழைப்பு அனுப்பப்பட்​ட​தாக​ இந்​தியா தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி