இலங்கை சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலை என்ன?
இலங்கைக்கு கடந்த 19 நாட்களுக்குள் மாத்திரம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 211 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஏப்ரல் 1 முதல் 19 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 25 ஆயிரத்து 634 பேரும், பிரிட்டனில் இருந்து 7 ஆயிரத்து 672 பேரும், ஆஸ்திரேலியாவில் 7 ஆயிரத்து 351 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். […]












