லெபனான், இஸ்ரேலுக்கிடையில் 2ஆம் கட்ட அமைதி பேச்சு!
இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையில் 2ஆம் கட்ட அமைதி பேச்சு வாஷிங்டனில் நடைபெறவுள்ளது.
தற்போது அமுலில் உள்ள 10 நாள் தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் எனக் கூறப்படுகின்றது.
லெபனான் எல்லைகளில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறுதல் மற்றும் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவித்தல் போன்ற கோரிக்கைகளை லெபனான் ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் பலனாகவே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





