வெப்ப அலை – பிரான்ஸில் 19 நாட்களில் 5764 பேர் உயிரிழப்பு
பிரான்ஸ் நாட்டில் ஜூன் 17 முதல் ஜூலை 2 வரையான காலப்பகுதியில் கடும் வெப்ப அலைக் காரணமாக 5,764 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார நிறுவனம் நேற்று அறிவித்தது.
சுகாதார அமைச்சர் ஸ்டெஃபனி ரிஸ்ட் (Stephanie Rist) கடந்த ஜூன் மாத இறுதியில் இந்த எண்ணிக்கையை 2,025 என மதிப்பிட்டிருந்த நிலையில் தற்போது 05 ஆயிரத்தை கடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜூன் 25 முதல் 27 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக கடும் வெப்ப அலையில் சிக்கிய 75 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 3 இல் 02 பங்கு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




