இலங்கை சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலை என்ன?
இலங்கைக்கு கடந்த 19 நாட்களுக்குள் மாத்திரம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 211 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஏப்ரல் 1 முதல் 19 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 25 ஆயிரத்து 634 பேரும், பிரிட்டனில் இருந்து 7 ஆயிரத்து 672 பேரும், ஆஸ்திரேலியாவில் 7 ஆயிரத்து 351 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.
கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
இவ்வருடம் இதுவரையான காலப்பகுதிக்குள் 8லட்சத்து 28 ஆயிரத்து 845 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
எனினும், கடந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன்
ஒப்பிடுகையில் இம்முறை சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது.
மேற்காசிய போர் சூழல், விமான சேவை ரத்து உள்ளிட்ட காரணங்களாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.





