இஸ்ரேல் தாக்குதலில் ஊடகவியலாளர் பலி: லெபனான் கடும் சீற்றம்!
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர் அமல் கலீல் Amal Khalil கொல்லப்பட்டதை லெபனான் அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.
மேற்படி தாக்குதலில் மற்றொரு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார்.
இஸ்ரேல் வேண்டுமென்றே ஊடகவியலாளர்களையும், சுகாதார சேவையாளர்களையும் குறிவைத்ததாக லெபனான் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.
தாக்குதலில் பலியான ஊடகவியலாளர் அல்-அக்பார் என்ற செய்தி நிறுவனத்திற்காகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், ஊடகவியலாளர்மீது தாக்கங் தாக்குதல் நடத்தவில்லை என எனவும், மீட்புப் பணிகளைத் தடுக்கவில்லை என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையில் போர் நிறுத்தம் அமுலில் உள்ள சூழ்நிலையில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




