நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல் – யாழ் மருத்துவமனைக்கு அபராதம்
நோயாளிகளிடம் அதிகபட்ச கட்டணங்களை வசூலித்தமைக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் முழு இரத்த எண்ணிக்கை (FBC) பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணத்தை நுகர்வோர் உரிமையியல் ஆணைக்குழு (CAA) 400 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.
இருப்பினும் குறித்த தனியார் மருத்துவமனை அதே பரிசோதனைக்கு 550 ரூபாயை வசூலித்து வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, நுகர்வோர் உரிமையியல் ஆணைக்குழு அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த நிலையில், 3 மில்லியன் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது, நிர்ணயிக்கப்பட்ட மருத்துவச் சேவைக் கட்டணங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு நுகர்வோர் உரிமையியல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.




