ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பற்ற சூழலுக்கு அமெரிக்கா, இஸ்ரேலே காரணம்!
வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே முக்கியக் காரணம் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi குற்றஞ்சாட்டியுள்ளார்.
தெஹ்ரானில் தென்கொரிய தூதுவருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, மேற்படி ஆக்கிரமிப்பு தாக்குதல்களை உலக நாடுகள் உறுதியுடன் கண்டிக்க வேண்டும்.
தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச சட்டங்களின்படி ஈரான் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாப் பகுதியில் ஏற்படும் தேவையற்ற விளைவுகளுக்கு தாக்குதல் நடத்தியவர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என Abbas Araghchi மேலும் கூறியுள்ளார்.




