இலங்கை செய்தி

நீலகாமம் சம்பவம்: பிரதி அமைச்சர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

  • April 27, 2026
  • 0 Comments

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில் பெருந்தோட்ட பகுதிகளில் அடியாட்களை வைத்திருப்பது சட்டவிரோதம் எனவும், நீலகாமத்துக்கு சென்றவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை முன்வைக்குமாறும் பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளரிடம் இதற்குரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கஹவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பிலும், வீடமைப்பு சம்பவம் குறித்தும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இன்று […]

செய்தி

புதுச்சேரியில் பாடசாலைகளில் இந்தி திணிப்பிற்கு திமுக மற்றும் அதிகமுக எதிர்ப்பு

  • April 27, 2026
  • 0 Comments

இந்தியாவின் புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கையில் இந்தி சேர்க்கப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோன்று அதிமுகவும் இரு மொழி கொள்கைக்கே ஆதரவு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பாடசாலைகளில் 2026 – 27 ஆம் கல்வியாண்டு முதல், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 ஆவது மொழியைக் கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, ‘தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023’ இன் பரிந்துரைகளை அமல்படுத்த உள்ளனர். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த பாடசாலைளுக்கு […]

செய்தி

தையிட்டியில் தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கஜேந்திரகுமார் அவசர கடிதம்

  • April 27, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ். மாவட்ட செயலாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். இந்தக் காணிகளை நாளைய தினம் அளவீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மாவட்ட செயலாளருக்கு அவர் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த 17 வருடங்களாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராடி வரும் நிலையில், காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் […]

உலகம் செய்தி

லெபனானில் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புமைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

  • April 27, 2026
  • 0 Comments

கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கிலும், நாட்டின் தெற்குப் பகுதி முழுவதிலும் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்பு தளங்கள் எனக் கூறப்படும் இடங்களில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள திப்னின் (Tibnin) மற்றும் யேட்டர் (Yater) நகரங்களையும் இலக்குவைத்து இரண்டு தனித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்த போர் நிறுத்தம் நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை என அவுஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் இன் […]

இலங்கை செய்தி

போதைப்பொருளுடன் கைதான பிக்குகள் : சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பாதுகாப்பு அமைச்சர்

  • April 27, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருட்களுடன் கைதான பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் இன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என கூறிய அவர் பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும் பலமானவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் கூறினார். இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக மேலதிக ந டவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் […]

இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

  • April 27, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதையடுதது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார். பெரியவிளான் பகுதியிலுள்ள காணியொன்றை சுத்தம் செய்யும் பணிகளுக்காக அந்த பகுதிக்கு நேற்று(26) காலை சென்றிருந்த போது பெண்ணொருவருடன் அர்ச்சுனா வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து அவரை நோக்கி குறித்த பெண் கல்வீச்சு தாக்குதலை […]

இலங்கை செய்தி

பதவி விலகுகிறாரா ஷம்மி சில்வா?

  • April 27, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா எதிர்வரும் புதன்கிழமை (29) தனது பதவியை இராஜினாமா செய்யவதற்கான சாயத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவராகப் பணியாற்றி வரும் ஷம்மி சில்வா, பொறுப்புவாய்ந்த தரப்பினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே இந்தப் பதவியை விட்டு விலகவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகம் குறித்து கிரிக்கெட் இரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் கடும் […]

ஐரோப்பா செய்தி

பிரியானா வழக்கு- சமூக ஊடக நிறுவனங்களுடனான பிரதமரின் சந்திப்பால் தாயார் கடும் அதிருப்தி

  • April 27, 2026
  • 0 Comments

இணையப் பாதுகாப்பு தொடர்பாக சமூக ஊடக நிறுவன தலைவர்களை பிரதமர் சந்தித்தது தனக்கு மிகுந்த ஏமாற்றமளிப்பதாக 2023 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட பதின்ம வயதுப் பெண் பிரியானா கேய்யின் (Brianna Ghey) தாயார் தெரிவித்துள்ளார். பிரதமர் ஸ்டார்மர் (Starmer) இந்த மாதத் தொடக்கத்தில் கூகுள், டிக்டாக் மற்றும் மெட்டா (Meta) நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து, பிரித்தானிய குழந்தைகளை பாதுகாக்க இணைந்து செயல்படுமாறு வலியுறுத்தினார். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் கலந்துரையாடுவதற்கு முன்பாக இவ்வாறு நிறுவன தலைவர்களை சந்தித்தது […]

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மருக்கு பதிலாக ரெய்னர் அல்லது பர்ன்ஹாம் தலைவராக வேண்டும் – பசுமைக் கட்சி தலைவர்

  • April 27, 2026
  • 0 Comments

பிரதமர் ஸ்டார்மர் (Starmer) பதவியிலிருந்து விலகி, ஏஞ்சலா ரெய்னர் (Angela Rayner) அல்லது ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) தொழிலாளர் கட்சி தலைவராக வர வேண்டும் என பசுமைக் கட்சி தலைவர் சாக் பொலான்ஸ்கி (Zack Polanski) தெரிவித்தார். ஸ்கை நியூஸ் இற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஸ்டார்மரை விட ரெய்னரும் பர்ன்ஹாமும் தனது அரசியல் நிலைப்பாடுகளுக்கு நெருக்கமானவர்கள் என கூறினார். மேலும், வாழ்க்கைச் செலவு நெருக்கடியை சமாளிப்பதிலும், மக்களின் நலனில் அக்கறை கொள்வதிலும் […]

உலகம் செய்தி

கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கான தேவை கடுமையாகப் பாதிப்பு – தென் கொரியா எச்சரிக்கை

  • April 27, 2026
  • 0 Comments

போரின் தாக்கத்தால் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கான தேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய கப்பல் கட்டும் நிறுவனமான ஹன்வா ஓஷன் (Hanwha Ocean) தெரிவித்துள்ளது. வர்த்தகக் கப்பல்களுக்கான தேவை குறைந்து வருவதால், உலக வணிகத்தில் நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல்கள் எனப்படும் விஎல்சிசி (VLCC) வகை கப்பல்களுக்கு போரின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் உயர்ந்துள்ளதுடன், சில கப்பல்கள் ஹார்முஸ் […]

error: Content is protected !!