பதவி விலகுகிறாரா ஷம்மி சில்வா?
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா எதிர்வரும் புதன்கிழமை (29) தனது பதவியை இராஜினாமா செய்யவதற்கான சாயத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவராகப் பணியாற்றி வரும் ஷம்மி சில்வா, பொறுப்புவாய்ந்த தரப்பினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே இந்தப் பதவியை விட்டு விலகவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகம் குறித்து கிரிக்கெட் இரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சி மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருந்தது.
இந்த நிலையில் அவரை பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்காலத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





