பிரித்தானியாவில் ஒருவழிப் பேருந்துக் கட்டணம் 02 பவுண்ட்ஸாக நிர்ணயம்
ஜனவரி மாதம் முதல் இங்கிலாந்து முழுவதும் ஒருவழிப் பேருந்துக் கட்டணம் 02 பவுண்ட்ஸாக நிர்ணயிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில், மலிவு விலையில் போக்குவரத்து இணைப்புகளை வழங்குவதையும், மக்களுக்கு நிதி நிவாரணம் அளிப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மொத்த செலவு £500 மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தற்போது £454 மில்லியன் நிதி ஆதரவு உள்ளது.
மீதமுள்ள நிதி போக்குவரத்துத் துறையின் தற்போதைய பேருந்து நிதி ஒதுக்கீட்டிலிருந்து பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 03 பவுண்ட்ஸாக உள்ள ஒருவழிப் பேருந்துக் கட்டணம் வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.




