ஐரோப்பா செய்தி

மூளைக்காய்ச்சல் பரவல் கணிசமானளவு குறைந்துள்ளதாக தகவல்

  • March 23, 2026
  • 0 Comments

கேன்டர்பரி (Canterbury) பகுதியில் மூளைக்காய்ச்சல் (Meningitis) பரவல் கணிசமானளவு குறைந்துள்ளதாக பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு முகமை (UKHSA) தெரிவித்துள்ளது. கென்ட் (Kent) பகுதியில் மொத்தம் 29 பேர் மூளைக்காய்ச்சல் பாதிப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரவலுக்கு எதிராக நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தகுதியுள்ள நபர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் தடுப்பூசிகள் வழங்கும் நான்கு மருத்துவ மையங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பொதுச் சுகாதார சேவைகளின் தகவலின்படி, 9,300 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் மேலும் 12,700 […]

உலகம் செய்தி

ஈரான் உடன் ஒப்பந்தம் ஏற்பட்டால் எண்ணெய் விலை சரிவடையும்

  • March 23, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால் எண்ணெய் விலையில் பாரிய சரிவு ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போர் தொடங்கிய பின்னர் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கப்பல்கள் முக்கிய கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தி வருகின்றன. ட்ரம்ப், இரு நாடுகளும் 15 அம்சங்களை விவாதித்து வருவதாகவும், ஈரான் அணு ஆயுதங்களை கைவிடுவது முதல் முக்கிய அம்சங்களாகும் என்றும் கூறினார். அவர் மேலும், “ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம், ஆனால் எந்த […]

ஐரோப்பா செய்தி

கோப்ரா அவசரக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்

  • March 23, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் நிலையில், அதனை எதிர்கொள்ள “கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வழிமுறையையும்” பயன்படுத்துவது குறித்து பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள கோப்ரா அவசரக் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து உயர்மட்ட ஆலோசனைகள் நடத்தப்படும் முக்கிய மேடையாக கோப்ரா கூட்டங்கள் உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக ( Starmer) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். போர் காரணமாக மக்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் […]

இலங்கை செய்தி

வலுசக்தி பயன்பாடு குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

  • March 23, 2026
  • 0 Comments

“நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவர்களின் பங்களிப்புடன் நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும்.” இவ்வாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்காக தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற […]

செய்தி

பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகள் அதிகரிக்கப்படாது

  • March 23, 2026
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா நிறுவனங்கள் இன்று (23) வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவைச் சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய போர்ச் சூழல் காரணமாக விநியோக வலையமைப்பிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தொடர்ச்சியான விநியோகத்தைப் பேணுதல் குறித்து […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு தோள்கொடுக்க ஈரான் எப்போதும் தயார்!

  • March 23, 2026
  • 0 Comments

இலங்கைக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு ஈரான் தயாராகவே இருக்கின்றது என்று அந்நாட்டு தூதுவர் Alireza Delkhosh தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “பிராந்திய நிகழ்வுகளால் தேவையான எண்ணெயைப் பெறுவதில் இலங்கை சிரமங்களை எதிர்கொண்டால், ஈரான் தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்கும். ஹோர்முஸ் நீரிணை நட்பு நாடுகளுக்கு மூடப்படவில்லை, மேலும் நாங்கள் இலங்கைக்கு தேவையானவற்றை வழங்க எப்போதும் தயாராக இருக்கிறோம். […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

உடையும் வால்நட்சத்திரம்: நாசாவின் ஹப்பிள் சாதனை!

  • March 23, 2026
  • 0 Comments

Image credit: NASA, ESA, Dennis Bodewits (AU) நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி (Hubble Space Telescope), விண்வெளியில் ஒரு வால்நட்சத்திரம் பல துண்டுகளாக உடைந்து சிதறுவதை முதன்முறையாக மிக நெருக்கமாகவும், நேரலையாகவும் படம் பிடித்துள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தற்செயலாக நடந்த கண்டுபிடிப்பு என்றும் விஞ்ஞானிகள் உண்மையில் வேறொரு விண்வெளிப் பொருளை ஆய்வு செய்யவே திட்டமிட்டிருந்தனர். ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால், அவர்களின் கவனம் C/2025 K1 (ATLAS) […]

இலங்கை செய்தி

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

  • March 23, 2026
  • 0 Comments

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. தற்போது 27 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா செய்தி

வட லண்டனில் யூத சமூக அமைப்பிற்குச் சொந்தமான வாகனங்கள் தீக்கிரை – அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் கடும் கண்டனம்

  • March 23, 2026
  • 0 Comments

வட லண்டன் பகுதியில் யூத சமூக அமைப்பிற்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். பிரித்தானியா யூத எதிர்ப்பை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்பதை வார்த்தைகளிலும் செயல்களிலும் தெளிவுபடுத்த வேண்டும் என கன்சர்வவேடிவ் கட்சித் தலைவர் கெமி பேடனோக் தெரிவித்துள்ளார். கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் வாழும் மக்கள் தாக்குதல்களால் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். லண்டன் மேயர் சாதிக் கான் (Sadiq Khan), […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தவில்லை: ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் மறுப்பு!

  • March 23, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி கூறுவதுபோல இரு நாடுகளுக்கும் இடையில் எவ்விதமான கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. போரின் மூலம் தான் அடைய நினைக்கும் இலக்குகளை எட்டும் வரை அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப்போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஆக்கபூர்வமான பேச்சுகள் நடைபெறுவதால் ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் இன்று அறிவித்தார். இந்நிலையிலேயே ஈரான் வெளிவிவகார அமைச்சு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது என சர்வதேச […]

error: Content is protected !!