இலங்கை செய்தி

26 ஆம் திகதி இலங்கை வருகிறது ரஷ்ய தூதுக்குழு: பின்னணி என்ன?

  • March 24, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று நாளை மறுதினம் 26 ஆம் திகதி இலங்கை வருகின்றது. ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான குழுவே கொழும்பு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. 28 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்கும் மேற்படி குழுவினர் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உட்பட முக்கிய பிரமுகர்களுடன் பேச்சு நடத்தவுள்ளனர். மேற்காசியாவில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் பின்னணியில் ரஷ்ய குழுவின் […]

இலங்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

  • March 24, 2026
  • 0 Comments

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிரதேச அலுவலகங்களிலும் இன்றைய தினம் பொதுச் சேவைகள் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று செயற்படாது என ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை விரைவில் சரிசெய்து, பொதுச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க […]

ஆஸ்திரேலியா செய்தி

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா இணக்கம்!

  • March 24, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையில் நீண்டகால பேச்சுக்கு பின்னர், வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உத்தேச ஒப்பந்தமானது ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வயின் மற்றும் இறைச்சி போன்ற முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கான வரிச் சுமைகளைக் குறைக்கவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குப் பதிலீடாக ஐரோப்பியப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை நீக்கவும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை வழங்கவும் ஆஸ்திரேலியா இணங்கியுள்ளது. வர்த்தகத்தைத் தாண்டி, பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளிலும் […]

பொழுதுபோக்கு

25 நாட்களை கடந்து வசூல் வேட்டையாடும் தாய் கிழவி!

  • March 24, 2026
  • 0 Comments

தாய் கிழவி திரைப்படம் வெளியான 25 நாட்களில் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். இப்படம் வெளியானத்தில் இருந்து விமர்சண ரீதியில் பாராட்டுக்களை பெற்று வருகின்றது. தற்போது, தாய் கிழவி திரைப்படம் வெளியான 25 நாட்களில் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. வசூலுடன் சேர்த்து இந்தப் படம் […]

உலகம் செய்தி

போர் முடிவுக்குவர வேண்டும்: EU தலைவர் வலியுறுத்து!

  • March 24, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen, வலியுறுத்தியுள்ளார். இந்தப் போர் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து அவர் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, சர்வதேச வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பதற்கான பணிகளில் சில ஐரோப்பிய நாடுகள் ஈடுபடத் தயாராக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். எரிபொருள் […]

உலகம் செய்தி

பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துகிறது பிரிட்டன்!

  • March 24, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பிரிட்டன் அரசாங்கம் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஓர் அங்கமாக Cyprus தீவில் வான்வெளி பாதுகாப்பை உறுதிப்படுத்த HMS Dragon எனும் போர்க்கப்பல் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, பிரிட்டன், அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படைகளுடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளது. அத்துடன், பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற நட்பு நாடுகளுக்கு மேம்பட்ட ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வழங்கி […]

இலங்கை

பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

  • March 24, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவும் கடும் வெப்பத்துடனான வானிலை காரணமாக, சிறுவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கப் பெற்றோர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். அதிகப்படியான தூக்கக்கலக்கம் அல்லது சோம்பல், பசியின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் சிறுவர்களிடம் தென்பட்டால் அவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் சிறுவர்களுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான பானங்களை (Natural fluids) வழங்குவது அவசியமாகும் […]

இலங்கை

உச்சத்தில் பேருந்து கட்டணம்!

  • March 24, 2026
  • 0 Comments

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து, நேற்று (23) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 27 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இரண்டாயிரத்து 159 ரூபாயாக இருந்த அதிகபட்சக் கட்டணம் 263 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய கட்டணமாக இரண்டாயிரத்து 422 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் வழக்கம் போல் பேருந்துச் சேவைகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் என […]

உலகம் செய்தி

‘5 நாள் போர் நிறுத்தம்’ – இஸ்ரேல் கூறுவது என்ன?

  • March 24, 2026
  • 0 Comments

“ஈரானுடனான புதிய உடன்படிக்கை மூலம் போரின் நோக்கங்களை அடைவதற்கும், பிராந்தியத்தில் தமது முக்கிய நலன்களைப் பாதுகாக்கவும் வாய்ப்புள்ளதாக டிரம்ப் Donald Trump கருதுகின்றார்.” இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu தெரிவித்தார். ஈரான்மீதான தாக்குதல்கள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்தார். தமது நாட்டுடன் ஈரான் பேச்சு நடத்திவருகின்றது எனவும் அவர் கூறினார். எனினும், ஈரான் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. […]

உலகம்

ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்

  • March 23, 2026
  • 0 Comments

ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரானின் தெற்கு துறைமுக நகரில் அமைந்துள்ள குறித்த வானொலி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டது முதல் […]

error: Content is protected !!