ஐரோப்பா செய்தி

ஒக்ஸ்பிரிட்ஜை கைப்பற்றிய லண்டன் மாணவர்கள் – பராமரிப்பில் உள்ளோர் மற்றும் அகதிகள் படைத்த சாதனை

  • February 9, 2026
  • 0 Comments

வடகிழக்கு லண்டனில் உள்ள லண்டன் எக்ஸலன்ஸ் (Excellence) பாடசாலையின் அறுபத்தி இரண்டு மாணவர்கள், இந்த ஆண்டு பிரபலமான ஒக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் (Oxford and Cambridge) பல்கலைக்கழகங்களில் இடங்களைப் பெற்றனர். அவர்களில் சிலர் குறைந்த வருமான குடும்பம், பராமரிப்பில் உள்ளோர் அல்லது அகதி அந்தஸ்து பெற்றவர்கள் என பின்தங்கிய பின்னணியிலிருந்து வந்துள்ளனர். 2012 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட எக்ஸலன்ஸ் (Excellence) பாடசாலை, பெரும்பாலும் குறைந்த வருமான குடும்பங்களிலுள்ள மாணவர்களையும் பல்கலைக்கழக வரலாறு இல்லாத மாணவர்களையும் இணைத்துக்கொள்வதற்கு முன்னுரிமையளித்து […]

இலங்கை செய்தி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி: யாழில் சோகம்!

  • February 9, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இன்று (09) இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கி இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு […]

ஐரோப்பா

எப்ஸ்டீன் விவகாரம் – ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய வேல்ஸ் இளவரசர்!

  • February 9, 2026
  • 0 Comments

ஜெஃப்ரி எப்ஸ்டீன் பற்றிய சமீபத்திய  வெளிப்பாடுகளால் வேல்ஸ் இளவரசரும் இளவரசியும் “ஆழ்ந்த கவலையில்” உள்ளனர் என்று கென்சிங்டன் (Kensington) அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வெளியிடப்பட்ட மறைந்த பாலியல் குற்றவாளி தொடர்பான ஆவணங்களில் உள்ள புதிய தகவல்களின் வெளிச்சத்தில் இளவரசர் வில்லியமும் இளவரசி கேத்தரினும் “பாதிக்கப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்தினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அரண்மையுடன் தொடர்புடைய   மவுண்ட்பேட்டன் -வின்ட்சர் எப்ஸ்டீனுடனான உறவு குறித்த புதிய தகவல்கள் கசிந்ததை […]

இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: சேதமடைந்த படைத்தளங்களை புனரமைக்கிறது பாகிஸ்தான்!

  • February 9, 2026
  • 0 Comments

இந்தியா India முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூர் operation sindoor நடவடிக்கையின்போது சேதமடைந்த விமானப் படை தளங்களை புனரமைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் Pakistan ஈடுபட்டுள்ளது என தெரியவருகின்றது. காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு Pahalgam terrorist attack பதிலடியாக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் மீது இந்தியா அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இந்த இராணுவ நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டிருந்தது. மேற்படி தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள போஹ்லாரி விமானப்படை தளத்தின் விமான நிறுத்தும் […]

இலங்கை செய்தி

வடக்கு கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!

  • February 9, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்று திங்கட் கிழமை (09.02.2026) நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இன்று தொடக்கம் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு

ஸ்கொட்லாந்தின் அதிரடியில் வீழ்ந்தது இத்தாலி!

  • February 9, 2026
  • 0 Comments

T 20 உலக்கிண்ண தொடரில் 7ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலி அணியை 73 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது ஸ்கொட்லாந்து அணி. T20 போட்டியில் இன்று (09) நடைபெற்ற 7 ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலி Italy மற்றும் ஸ்கொட்லாந்து Scotland அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இத்தாலி அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மட்டும் 207 ஓட்டங்களைப் பெற்றது. […]

அரசியல் இலங்கை செய்தி

“உள்வீட்டுப் பிரச்சினை மிகக்கேவலமாக உள்ளது”

  • February 9, 2026
  • 0 Comments

“தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் உள்வீட்டுப் பிரச்சினை மிகக் கேவலமாக உள்ளது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் S. Siritharan தெரிவித்தார். “நாடாளுமன்றக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதைக்கூட இனிப்பு வழங்கி, பெனர் கட்டி கொண்டாடுகின்றனர். எமது மண்ணில் இதற்கு முன்னர் இப்படி நடந்துள்ளதா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார். “ எனக்கு எதிராக மிகப்பெரிய உளவியல் போர் தொடுக்கப்படுகின்றது. இந்த உளவியல் போரால்தான் கட்சியில் இருந்து பலர் வெளியேறினார்கள். என்.பி.பி.மீது தமிழ் மக்கள் காதல்கொண்டு வாக்களிக்கவில்லை. எமது கட்சிமீது […]

உலகம்

போண்டி துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற கடற்கரையில் இஸ்ரேல் ஜனாதிபதி அஞ்சலி!

  • February 9, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட போண்டி கடற்கரைப் பகுதியில், இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் (Isaac Herzog) இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். நான்கு நாள் விஜயமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர், போண்டி தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். “ஒரு யூதர் காயமடைந்தால், அனைத்து யூதர்களும் தங்கள் வலியை உணர்கிறார்கள்,” என்று கூறிய அவர், துக்கமடைந்த குடும்பங்களை அரவணைத்து ஆறுதல்படுத்த” அங்கு வருகை தந்ததாக கூறினார். அத்துடன் இந்த விஜயத்தின்போது […]

ஐரோப்பா

ரஷ்ய ஜெனரல் மீதான கொலை முயற்சி – பின்னணியில் போலந்து?

  • February 9, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் உயர்மட்ட  இராணுவ அதிகாரியான விளாடிமிர் அலெக்ஸீவ் (Vladimir Alexeyev) மீதான கொலை முயற்சி சம்பவத்திற்கும் போலந்திற்கும் தொடர்புள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் FSB உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஆட்சேர்ப்பு செய்வதில் போலந்து உளவுத்துறை ஈடுபட்டதாக எவ்வித ஆதாரத்தையும் முன்வைக்காமல் குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் இந்த கொலை முயற்சியை உக்ரைன் மறுத்துள்ள அதேநேரம் இது தொடர்பில் போலந்து எவ்வித கருத்தும் வெளியிடவில்லை. இதேவேளை இந்த கொலை முயற்சி தொடர்பில், உக்ரைனில்  பிறந்த […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் – தொழிற்சங்கங்கள் கூட்டாக அழைப்பு!

  • February 9, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ( Keir Starmer) பதவி விலக வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான மண்டேல்சனின் உறவு தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு  குறிப்பிடத்தக்க அழுத்தத்தை கொண்டுவந்துள்ளது. மண்டேல்சனை அமெரிக்க தூதராக நியமிக்க ஆலோசனை வழங்கிய மோர்கன் மெக்ஸ்வீனி (Morgan McSweeney)  பதவி விலகியதை தொடர்ந்து தற்போது ஸ்டாமரும் பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீயணைப்பு துறையின் தொழிற்சங்க  சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டீவ் ரைட் (Steve […]

error: Content is protected !!