அம்பாறையில் பெரும்போக நெல் அறுவடை மும்முரம்-இடையிடையே மழையும் குறுக்கீடு!
அம்பாறை மாவட்டத்தில் பெரும் போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இடையிடையே பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்ற அறுவடையின் போது இந்த முறை விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு விளைச்சல் கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் குறிப்பிட்டனர். மேலும் கடந்த வருடங்களில் தொடர் நஷ்டத்தை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு இம்முறை கணிசமானளவு விளைச்சல் கிடைத்துள்ளது என குறிப்பிட்ட அவர்கள் இடையிடையே ஏற்படும் மழைவீழ்ச்சி காரணமாக தற்போது சிரமங்களை […]













