இலங்கை

அம்பாறையில் பெரும்போக நெல் அறுவடை மும்முரம்-இடையிடையே மழையும் குறுக்கீடு!

அம்பாறை மாவட்டத்தில் பெரும் போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இடையிடையே பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்ற அறுவடையின் போது இந்த முறை விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு விளைச்சல் கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் குறிப்பிட்டனர்.

மேலும் கடந்த வருடங்களில் தொடர் நஷ்டத்தை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு இம்முறை கணிசமானளவு விளைச்சல் கிடைத்துள்ளது என குறிப்பிட்ட அவர்கள் இடையிடையே ஏற்படும் மழைவீழ்ச்சி காரணமாக தற்போது சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக அறுவடை இயந்திரங்கள் வயல் நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதனால் நெல் அறுவடையில் ஈடுபடுவது சிரமமாக உள்ளது. சில  இடங்களில் டிக்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு பிரதேசங்களில் நெல் விளைச்சல் குறைவடைந்துள்ளது.

மேலும் அரசு உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்யும் வேலைத் திட்டத்தை நெற்சந்தைப்படுத்தும் சபையின் ஊடாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. அக்கரைப்பற்று  சாகாமம், தீக வாபி,  நாவிதன்வெளி பாணம பொத்துவில் மல்வத்தை போன்ற கொள்வனவு நிலையங்கள் இதற்காகத் திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நாடு வெள்ளை மற்றும் சிவப்பரிசி இனங்களே அதிகம் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர அரிசி ஆலை உரிமை யாளர்கள் தனியார் வியாபாரிகள் ஆகியோர் விவசாயிகளிடம் இருந்து நெல்லை உடனுக்குடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.

66 கிலோ நிறையுடைய வெள்ளை மற்றும் சிவப்பரிசி நெல் மூடையொன்று 5700 முதல் 6000 ரூபாவரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெளி மாவட்டங்களில் இருந்து தினசரி அம்பாறை மாவட்டத்துக்கு வரும் வியாபாரிகளும் நெல் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை பெரும்போக அறுவடை ஆரம்பமாகும் போது 7800 ரூபாவுக்கு விற்கப்பட்ட நெல் விலையே தற்போது குறைவடைந்துள்ளது.

இதேவேளைஇ சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நஷ்டஈடும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லுக்கான கேள்வி அதி உச்சத்தில் காணப்படுகின்றது.

எனினும் சில இடங்களில் மழை ,பனி பொழிவு காரணமாக நெல் ஈரத்தனமையுடன் காணப்படுவதாகவும் இதனால் குறைந்த விலையில் ஈரமான நெல் கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் அங்கலாய்க்கின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்