இலங்கை

காங்கேசன்துறை கடற்பகுதியில் 25 மீனவர்கள் கைது : படகுகள் பறிமுதல்!

  • February 16, 2026
  • 0 Comments

கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 02 மீன்பிடி படகுகள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைக்காக அந்தக் குழு காங்கேசன்துறை மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்தியா

பங்களாதேஷ் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு பிரதிநிதியை அனுப்புகிறது இந்தியா!

  • February 16, 2026
  • 0 Comments

பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் Tariq Rahman நாளை (17) பதவியேற்கவுள்ளார். பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலிதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்களாதேஷில் பிஎன்பி ஆட்சி அமைய உள்ளது. பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை( 17) பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு, பங்களாதேஷ் நேற்று அழைப்பு விடுத்துள்ளது. எனினும், வரும் […]

உலகம்

எதிர்க்கட்சி தலைவரின் மரணத்துக்கு புடின் பொறுப்பு கூற வேண்டும்: ஆஸ்திரேலியா வலியுறுத்து!

  • February 16, 2026
  • 0 Comments

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் Alexei Navalny மரணத்துக்கு புடின் Putin நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் Penny Wong வலியுறுத்தியுள்ளார். அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், சுவீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்துள்ளன. மேற்படி நாடுகளை சேர்ந்த வெளியுறவத்துறை அமைச்சர்கள் இதனை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே ஆஸ்திரேலியா மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் […]

இந்தியா

புதுடெல்லியில் இன்று ஆரம்பமாகும் AI உச்சிமாநாடு!

  • February 16, 2026
  • 0 Comments

AI உச்சிமாநாடு  புதுடெல்லியில்  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ளது. 05 நாள் இடம்பெறும்  இந்த மாநாட்டில்  45 நாடுகளைச் சேர்ந்த 20 உலகத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் அளவிலான பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். AI தொழில்நுட்பத்தால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களைக் குறைப்பதன் மூலம் உலகளாவிய ஒத்துழைப்புக்கான பொதுவான பாதை வரைபடத்தை உருவாக்குவதே இந்த உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI), குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நெறிமுறை பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படும் […]

செய்தி

வான்வழி கண்காணிப்பை வலுப்படுத்த சவூதியிடம் உதவி கோரியது இலங்கை!

  • February 16, 2026
  • 0 Comments

இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ,சவூதி கடற்படை (RSNF) தளபதி வைஸ் அட்மிரல் Mohammed bin Abdulrahman Al-Ghribi உடன் உயர் மட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார். கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த சந்திப்பு, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பாதுகாப்பு அமைச்சில், World Defence Show (WDS) 2026 நிகழ்வின் போது நடைபெற்றது. இலங்கை ஒரு தீவாக இருப்பதினால், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல், மனிதக் கடத்தல், […]

உலகம்

06 தசாப்தங்களுக்கு பிறகு காசாவில் நிலப் பதிவு செய்யும் இஸ்ரேல் – உரிமையை இழக்கும் பாலஸ்தீனியர்கள்!

  • February 16, 2026
  • 0 Comments

1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு காசாவில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப் பதிவுக்கான செயல்முறையை இஸ்ரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்நடவடிக்கையானது சர்வதேச சட்டத்தை மீறி பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கும் இடம்பெயர்வதற்கும் உதவும் என்று இஸ்ரேலிய உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன. தீவிர வலதுசாரி நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ( Bezalel Smotrich) , நீதி அமைச்சர் யாரிவ் லெவின் (Yariv Levin) மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. […]

இலங்கை செய்தி

யாழ். வலி.வடக்கில் ஏப்ரலில் காணி விடுவிப்பு!

  • February 16, 2026
  • 0 Comments

“ யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளில் ஒரு தொகுதி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளன.” இவ்வாறு கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekar தெரிவித்தார். மக்களுடைய காணிகளை அவர்களிடமே மீள ஒப்படைக்க வேண்டும் என்பதில் தற்போதைய அரசு உறுதியான நிலைப் பாட்டில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். “ பாதுகாப்புத் தேவைகளைக் கருத்திற்கொண்டு வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் காணிகள் படையினரின் வசமிருக்க வேண்டிய தேவை […]

ஐரோப்பா

ஊழல் குற்றச்சாட்டு – உக்ரைனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் கைது!

  • February 16, 2026
  • 0 Comments

உக்ரைனின்  முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ (German Galushchenko) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாட்டின் எல்லையை கடக்க முயன்றபோது உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்புப் பிரிவினரால் (NABU), கைது செய்யப்படதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ சட்டத்தின் தேவைகள் மற்றும் நீதிமன்றத் தடைகளின்படி “ஆரம்ப விசாரணை நடவடிக்கைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் எரிசக்தி துறையில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக NABU வெளிப்படுத்தியதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் ஜெர்மன் கலுஷ்செங்கோ  (German […]

இலங்கை முக்கிய செய்திகள்

ஈழ மக்களின் குடியுரிமை பிரச்சினை – தேர்தல் காலத்தில் மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!

  • February 16, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை பிரஜைகளுக்கு குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில்,  இந்த பிரச்சினை  ஆழ்ந்த மனிதாபிமான, அரசியலமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்று விவரித்துள்ளார். சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள் அகதி முகாம்களுக்குள்ளும் வெளியேயும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வசித்து […]

இலங்கை செய்தி

O/L பரீட்சை நாளை ஆரம்பம்: கல்வியால் வடக்குக்கு பெருமை சேர்க்க ஆளுநர் அழைப்பு!

  • February 16, 2026
  • 0 Comments

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை (O/L) நாளை செவ்வாய்க்கிழமை (17.02.2026) ஆரம்பமாகின்றது. இந்நிலையில் ” பரீட்சைக்குத் தோற்றும் எமது அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கடந்த காலப் பின்னடைவுகளைத் தகர்த்தெறிந்து, இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் நீங்கள் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளவை […]

error: Content is protected !!