செய்தி தமிழ்நாடு

ஊட்டி, குன்னூரில் பலத்த மழை, 16 இடங்களில் மண் சரிவு –  ரயில் சேவைகள் பாதிப்பு

  • January 2, 2026
  • 0 Comments

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குன்னூரில் 215 மில்லி மீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பனியின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. அவ்வப்போது உறை பனியின் தாக்கம் அதிகமாக தென்பட்ட நிலையில், திடீரென காலநிலை மாறி மழை […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் ஏழை, செல்வந்தர்களிடையே பாகுப்பாடு காட்டும் தொழிற்கட்சி அரசாங்கம்!

  • January 2, 2026
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு தொழிற்கட்சி ஆட்சியமைத்ததில் இருந்து பிரித்தானியாவில் உள்ள ஏழ்மையான குடும்பங்களின் விருப்ப வருமானம் 2.1% குறைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. மாறாக, மிகவும் வசதியான குடும்பங்கள் அதே காலகட்டத்தில் தங்கள் விருப்ப வருமானத்தில் 10.3% உயர்வை அனுபவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது பிரித்தானியாவில் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகளை அடிகோடிட்டு காட்டுகிறது. பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ( Sir Keir Starmer) அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். […]

அரசியல் இலங்கை செய்தி

ஆங்கில பாடபுத்தகத்தில் முறையற்ற குறிப்பு: பின்னணியில் ராஜபக்சக்களா?

  • January 2, 2026
  • 0 Comments

“தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ இந்த விடயம் எவ்வாறு நடந்தது என்பது பற்றி விசாரணை அவசியம். கல்வி அமைச்சின் செயலாளர் சிஐடியில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த புத்தகத்தை எதிரணியா அச்சிட்டது? சிலவேளை, ராஜபக்சக்கள்தான் […]

இலங்கை செய்தி

மத்துகம பிரதேச சபைத் தலைவருக்கு விளக்கமறியல்

  • January 2, 2026
  • 0 Comments

மத்துகம பிரதேச சபைத் தலைவர் கசுன் முனசிங்கவை  எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை வேலைக்குச் சென்றபோது, ​​தலைவர் தனது அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து தனது உத்தியோகபூர்வ கடமைகளில் தலையிட்டதாகக் கூறி, உள்ளூராட்சி மன்ற செயலாளர் மத்துகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இதன்பின்னர் பிரதேச சபை செயலாளரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி மத்துகம பிரதேச சபைத் தலைவர் கசுன் முனசிங்க பொலிஸாரால் கைது […]

இலங்கை செய்தி

ஒரு பில்லியன் இழப்பீடு கோரும் நளிந்த – கடும் எச்சரிக்கையும் விடுப்பு

  • January 2, 2026
  • 0 Comments

யூடியூப் செயற்பாட்டாளர் ஒருவருக்கு எதிராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஒரு பில்லியன் ரூபாவை நட்ட ஈடாக கோரி சட்டத்தரணி ஊடாக சம்மன் அனுப்பியுள்ளார். மருந்து வகையொன்றை நாட்டிற்கு கொண்டு வந்த விடயம் தொடர்பில் தனது பெயரை தொடர்புபடுத்தி யூடியுப் அலைவரிசையொன்றின் ஊடாக போலி தகவல்களை பரப்பி பொதுமக்களை அச்சத்துக்கு உட்படுத்தும் வகையில் அந்த யூடியூப் செயற்பாட்டாளர் செயற்பட்டதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். சர்ச்சைக்குரிய மருந்து உள்ளிட்ட 10 வகையான மருந்துகள் தொட்ரபில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. […]

அரசியல் இலங்கை

மின் கட்டணத்தை அதிகரிப்பது மக்கள் ஆணையை காட்டிக்கொடுக்கும் செயல்: சஜித் சீற்றம்!

  • January 2, 2026
  • 0 Comments

டித்வா புயலால் இலட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மின்சாரக் கட்டணத்தை 11.57 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa குற்றஞ்சாட்டினார். விசேட காணொளியொன்றை இன்று (02) வெளியிட்டே சஜித் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்கித் தருவோம் என்ற வாக்குறுதிப் பத்திரத்தின் பேரிலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. ஆனால், வளமான நாட்டையும், அழகான […]

ஐரோப்பா

ஸ்பெயினில் பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து கொள்ளை!

  • January 2, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் பிரபலமான சுற்றுலாத் தலங்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபடும் கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்சின் (France) நைஸை (Nice) தளமாகக் கொண்ட இந்தக் குழு  motorhome  வாகனத்தை  பயன்படுத்தி நாடு முழுவதும் சுற்றித்திரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வலென்சியா (Valencia) , அண்டலூசியா (Andalusia), பலேரிக் (Balearic) தீவுகள் மற்றும் மாட்ரிட் போன்ற பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த குற்றவியல் குழுவை” சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,   அவர்கள் […]

உலகம்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் – தருணம் பார்த்து காத்திருக்கும் அமெரிக்கா!

  • January 2, 2026
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி அயதுல்லா கமேனி (Ayatollah Khamenei) பதவி விலகக்கோரியும், முடியாட்சியை வலியுறுத்தியும் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது. குறித்த பதிவில், “அமைதியான போராட்டக்காரர்களை ஈரான் சுட்டுக் கொன்றால், அது அவர்களின் வழக்கம், அமெரிக்கா அவர்களை மீட்கும்” என்று தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடைகளை அமுல்படுத்தியுள்ளது. இது அந்நாட்டின் […]

இலங்கை செய்தி

டிட்வா – பேரிடர் 80 வீதமானோருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

  • January 2, 2026
  • 0 Comments

“டிட்வா” புயலால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களில் சுமார் 80 வீதமானோருக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் படி, இதுவரை 519 பேருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அடையாளம் காணப்பட்ட மேலும் 92 நபர்களுக்கு சான்றிதழ்களை வழங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், பேரிடரைத் தொடர்ந்து 611 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜல்தீபன் […]

கருத்து & பகுப்பாய்வு

உலகில் முதன் முதலில் தகனம் செய்யப்பட்ட பெண் : ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்!

  • January 2, 2026
  • 0 Comments

உலகில் முதன் முதலில் தகனம் செய்யப்பட்ட உடல் ஒன்று மலாவியில் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 9500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உடல் தகனம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹோரா 1 (Hora 1) தொல்பொருள் தளத்தில்  பெண் ஒருவரை தகனம் செய்தமைக்கான  எச்சங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, பண்டைய வேட்டைக்காரர் சமூகங்களிடையே பின்பற்றப்பட்ட சவக்கிடங்கு நடைமுறைகள் மற்றும் சமூக ஒத்துழைப்பு பற்றிய பாரம்பரிய அனுமானங்களை சவால் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 500C க்கும் அதிகமான வெப்பநிலையை உருவாக்க […]