இலங்கை செய்தி

இந்தியாவில் பயிற்சி: இலங்கை கடற்படை அதிகாரி மரணம்

இந்தியாவில் நடைபெற்ற பிம்ஸ்டெக் (BIMSTEC) கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்கச் சென்றிருந்த இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர், திடீர் உடல்நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற பிம்ஸ்டெக் (BIMSTEC) கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்கச் சென்றிருந்த இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர், திடீர் உடல்நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார்.

அந்தமான் – நிகோபார் தீவுகளில், ஒக்ரோபர் 30ஆம் திகதி தொடக்கம், நொவம்பர் 3ஆம் நாள் வரை,பிம்ஸ்டெக் கடல்சார் பாதுகாப்புப் பயிற்சி இடம்பெற்றது.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கச் சென்றிருந்த இலங்கை கடற்படைக் கப்பலான ‘எஸ்.எல்.என்.எஸ் கஜபாகு’வில் பணியாற்றிய கொமாண்டர் எஸ்.ஏ.எஸ்.எம். சமரகோன், ஸ்ரீ விஜயபுரத்தில் நவம்பர் 2ஆம் திகதி காலமானார்.

அவரது உடல், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சி-130 விமானம் மூலம் நேற்று கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டது.

அதிகாரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை