தாய்லாந்தில் ஹுன் சென்னுடனான தொலைபேசி அழைப்பு கசிந்ததால் பிரதமரைப் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்
தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத்தைப் பதவி விலகும்படி கோரி பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் பேங்காக்கில் ஜூன் 28 கூடியுள்ளனர்.கம்போடியாவுடன் எல்லைத் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து ஷினவாத்தின் அரசாங்கத்துக்கு எதிரான சினம் வலுத்துள்ளது. 2023ஆம் ஆண்டு பியு தாய் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசாங்கத்துக்கு எதிராக முதன்முறையாக ஆகப் பெரிய ஆர்ப்பாட்டம் மூண்டுள்ளது.போர் நினைவிடமான விக்டரி நினைவுச்சின்னத்தில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிகளை அசைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கடந்த இருபது ஆண்டுகளாக ஷினவாத்தின் ஆதரவுபெற்ற அரசாங்கத்தை எதிர்த்து வரும் […]













