மத்திய கிழக்கு

தெஹ்ரான் அணுசக்தி திட்டத்தை கைவிடாது: ஈரானிய வெளியுறவு அமைச்சர்

  • July 22, 2025
  • 0 Comments

ஈரானுக்கு அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட எந்தத் திட்டமும் இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி கூறியுள்ளார். அமெரிக்காவின் கடந்த மாதத் தாக்குதலில் பல்வேறு வசதிகள் கடுமையாகச் சேதமடைந்தபோதும் யுரேனியத்துக்குச் செரிவூட்டும் திட்டம் உள்பட அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று ஈரான் சொன்னது. “இப்போதைக்குக் கடுமையான சேதங்களால் செரிவூட்டும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது,” என்று அராக்சி ஃபோக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.ஆனால் செரிவூட்டும் திட்டத்தை முழுமையாக நிறுத்திவிடமுடியாது என்ற அவர், “அது எங்கள் ஆராய்ச்சியாளர்களின் சாதனை. […]

பொழுதுபோக்கு

சாம் சிஎஸ்-க்கு கிடைக்காத வாய்ப்பு சாய் அபயங்கருக்கு குவிய காரணம் என்ன?

  • July 22, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் தற்போது பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அபயங்கர் தான். அவர் இசையில் இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாவிட்டாலும் தற்போது கைவசம் 8 படங்களை வைத்திருக்கிறார். அவர் பாடகர் திப்பு – ஹரிணி ஜோடியின் மகன் என்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், இவரால் சாம் சி.எஸ். போன்ற திறமையான இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், சாய் அபயங்கரோடு தன்னை ஒப்பிட்டு போடப்படும் […]

ஆசியா

பங்களாதேஷில் விபத்துக்குள்ளான விமானம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!

  • July 22, 2025
  • 0 Comments

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் பள்ளி கட்டடத்தின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி 07 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றும் 104 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில், நகரின் வடக்கு உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரியின் மைதானத்தில் விமானம் விபத்துக்குள்ளானது. “மீட்பு நடவடிக்கை இன்னும் தொடர்கிறது,” என்று ISPR இன் இயக்குனர் சமி உத் […]

இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு கிடைத்த இலாபம்!

  • July 22, 2025
  • 0 Comments

கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் நாட்டிற்கு கிடைத்த மொத்த பணம் 67,147 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். இன்று (22) நாடாளுமன்றத்தில் வாய்மொழி கேள்விகளுக்கு பதிலளித்த துணை அமைச்சர், இது 13,946 பில்லியன் இலங்கை ரூபாய் என்று கூறினார். 2015 முதல் மே 2025 வரையிலான 10 ஆண்டு காலத்திற்கான மத்திய வங்கி பதிவுகளை மேற்கோள் காட்டி துணை அமைச்சர் இந்த […]

இலங்கை

கனடாவில் இருந்து இலங்கை வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  • July 22, 2025
  • 0 Comments

கனேடிய பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 2:50 மணியளவில், கனடாவிலிருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை வந்த 37 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 18,123 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டார். இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், அந்தப் பெண்ணின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, சுமார் 181 மில்லியன் ரூபாய் மதிப்புடைய ஹஷீஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் இன்று முதல் புதிய விசா விதிகள் அறிமுகம்

  • July 22, 2025
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் இன்று முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது, என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ், வேலைவாய்ப்புக்காக வழங்கப்படும் விசாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக, நோயாளிகள் மற்றும் ஊனமுற்றவர்களை பராமரிக்க வரும் வெளிநாட்டு வேலைநிறுவன ஊழியர்களுக்கான விசா முற்றிலும் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளன. பட்டப்படிப்புக்குப் பிறகு முதுநிலை படிப்புகளுக்கான காலக்கெடு குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேடாக, வெளிநாட்டு […]

பொழுதுபோக்கு

ஜனநாயகனுக்காக பின்வாங்கும் பராசக்தி… ஆட்டநாயகனாக தளபதி

  • July 22, 2025
  • 0 Comments

விஜய்யின் கடைசி படமாக உருவாகும் ஜனநாயகன் அடுத்த வருட பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அதாவது ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் ரசிகர்கள் அடுத்த வருஷம் தளபதி பொங்கலை கொண்டாட ஆர்வத்துடன் இருக்கின்றனர். அதே சமயம் பொங்கலுக்கு நாங்களும் வருவோம் என பராசக்தியும் களமிறங்கியுள்ளது. விஜய்யோடு இப்படம் மோதுவதற்கான காரணம் அனைவரும் அறிந்தது தான். படத்தை வெளியிடுவது ரெட் ஜெயன்ட் என்பதால் நிச்சயம் ஜனநாயகன் படத்திற்கு ஏதாவது ஒரு குடைச்சல் […]

செய்தி

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் – ஆச்சரியமளிப்பதாக கூறிய டிரம்ப்

  • July 22, 2025
  • 0 Comments

இஸ்ரேல் கடந்த வாரம் சிரியாவில் நடத்திய தாக்குதல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு ஆச்சரியமளித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் டுருஸ் சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழும் சுவெய்டா நகரங்களில் நடைபெற்றது. இவ்வழியாக, சிரியா அரசு ராணுவத்தைக் கைவிட வைப்பதற்காக இஸ்ரேல் அழுத்தம் செலுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. மேலும், காஸா பகுதியில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் மீது நடைபெற்ற தாக்குதலும் அதிபர் டிரம்ப்புக்கு அதிர்ச்சி அளித்ததாக வெள்ளை மாளிகை செய்தி […]

வாழ்வியல்

ஏசியால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள்

  • July 22, 2025
  • 0 Comments

ஏசி பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் 7 பக்க விளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் பல இடங்களில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். ஆனால், நாம் ஏசியை பயன்படுத்தினால் உடலில் சில பக்க விளைவுகள் ஏற்படும். 1.ஏசி பயன்படுத்துவதால் சருமத்தில் ஈரப்பதத்தை இழந்து, வறட்சி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். 2. […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் விமான பயணிகளைப் பதறவைத்த விமானி

  • July 22, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் ஒரு பயண விமானம் எதிர்பாராத விதமாகச் சம்பவமொன்றில் சிக்கியதால், பயணிகள் பெரும் பதற்றத்தில் ஆழ்த்தப்பட்டனர். ஜூலை 18ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிகழ்வை ஸ்கை வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மின்னெசோட்டாவின் மின்னியெப்போலிஸ் – செயிண்ட் பால் நகரத்திலிருந்து வட டகோட்டா மாநிலத்தில் உள்ள மினோட் அனைத்துலக விமான நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானம், திடீரென ஒரு ராணுவ விமானம் மிக அருகில் பறந்ததை விமானி கவனித்தார். அந்த ராணுவ விமானம் எதிர்பாராத விதமாக […]