இலங்கை

கனடாவில் இருந்து இலங்கை வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கனேடிய பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 2:50 மணியளவில், கனடாவிலிருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை வந்த 37 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

18,123 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், அந்தப் பெண்ணின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, சுமார் 181 மில்லியன் ரூபாய் மதிப்புடைய ஹஷீஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருகோட தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்