உலகம்

பல நெருக்கடிக்கு மத்தியில் தென் கொரியாவில் இன்று ஜனாதிபதி தேர்தல்

  • June 3, 2025
  • 0 Comments

தென் கொரியர்கள் தற்போது புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களித்து வருகின்றனர். இருப்பினும், கடுமையான நெருக்கடி காலத்திற்குப் பிறகு நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் தொடங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோல் திடீரென இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியபோது தென் கொரியாவில் ஒரு நெருக்கடி நிலைமை தொடங்கியது. முன்னாள் ஜனாதிபதியின் பதவி நீக்கத் தீர்மானத்துடன் அது தீவிரமடைந்தது. நடந்து வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் லீ ஜே-மியுங் அதிக சாதகமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பொது இடங்களில் வைபை கண்டுபிடிக்க இலகு வழிமுறை

  • June 3, 2025
  • 0 Comments

துணை இல்லாமல் கூட பயணம் செய்துவிடலாம், ஆனால் இணையம் இல்லாமல் பயணம் செய்யமாட்டார்கள். அந்தளவுக்கு செல்போனும் இணையமும் அன்றாட பகுதியாக நம்மில் மாறிவிட்டது. இண்டர்நெட் இல்லாமல் எந்தவேலையும் நடக்காது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் தொடங்கி, ஒர்க் ஃபிரம் ஹோம் வேலை, மொபைல் கேம் வரை அனைத்திற்கும் இண்டர்நெட் பயன்பாடு தேவைப்படுகிறது. அப்படியான சூழலில் எல்லா இடங்களிலும் சொந்த மொபைல் டேட்டாவையே பயன்படுத்த வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பல்வேறு இடங்களில் இலவச […]

இலங்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண முடியாத நிலையில் இலங்கை

  • June 3, 2025
  • 0 Comments

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண்பதற்கான முறையானதொரு திட்டம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சுமத்துகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, டெங்கு, சிக்குன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அபாயங்கள் […]

விளையாட்டு

ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறாரா விராட் கோலி?

  • June 3, 2025
  • 0 Comments

இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்திய அணிக்கு அனைத்து வடிவங்களிலும் கேப்டன் ஆக இருந்த விராட் கோலி ஒரு முன் உதாரணமாக இருந்தார். குறிப்பாக கிரிக்கெட் வீரர் பிட்னஸில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உலகிற்கு எடுத்து காட்டியவர் விராட் கோலி தான். ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் […]

இலங்கை

இலங்கையில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு

  • June 3, 2025
  • 0 Comments

இலங்கையில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (03) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த […]

ஆசியா

சுகாதார நெருக்கடியை நிவர்த்தி செய்ய போராடி வரும் பாகிஸ்தான்

  • June 3, 2025
  • 0 Comments

சுகாதார நெருக்கடியை நிவர்த்தி செய்ய பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் நிறுத்தப்பட்ட பிறகு, போதுமான மருந்துகள் கையிருப்பு இல்லாததால் பாகிஸ்தானின் மருந்து பற்றாக்குறை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு அத்தியாவசிய மருந்துகளின் முக்கிய ஆதாரமாக இந்தியா உள்ளது. பாகிஸ்தானின் மூலப்பொருட்களில் 30-40 சதவீதம் இந்தியாவிலேயே உள்ளது, இதில் செயலில் உள்ள மருந்து பொருட்கள் \=மற்றும் பல்வேறு மேம்பட்ட சிகிச்சை பொருட்கள் அடங்கும். மேலும், புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைகள், உயிரியல் பொருட்கள், தடுப்பூசிகள் மற்றும் […]

ஆசியா

சிங்கப்பூருக்கு பணத்துடன் சென்ற 14 வெளிநாட்டவர்களுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்

  • June 3, 2025
  • 0 Comments

சிங்கப்பூருக்கு 14 வெளிநாட்டவர்கள் உட்பட 200 பயணிகளுக்கு பல்வேறு குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காரணம் கூற முடியாமல் பெருந்தொகை பணம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த வெளிநாட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்குள் நுழையும்போது அல்லது வெளியேறும்போது கையில் S$20,000 க்கு மேல் ரொக்கம் இருந்தால் அதை அதிகாரிகளிடம் முறையாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காததற்காக அல்லது தவறாக அறிவித்ததற்காக 14 வெளிநாட்டு பயணிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 26 முதல் 71 வயதுக்குட்பட்ட நான்கு பேர், $20,700 […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவை உலுக்கிய உக்ரைனின் தாக்குதல் – படைகளைப் பாராட்டிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

  • June 3, 2025
  • 0 Comments

ரஷ்யாவுக்குள் நடத்தப்பட்ட அண்மைத் தாக்குதல்களை உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பாராட்டியுள்ளார். நேற்று முன்தினம் மிகப் பெரிய அளவில் நடைபெற்ற தாக்குதலில் ரஷ்ய விமான படைத்தளங்கள் குறிவைக்கப்பட்டன. துருக்கியில் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் அமைதி உடன்பாட்டுக்கான பேச்சு தொடரவிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. சுமார் 120 ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ‘Spider’s Web’ என்ற அழைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் தாக்கப்பட்டதாய்க் கூறப்பட்டது. சுமார் 7 பில்லியன் டொலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாக உக்ரைனியப் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் கிறீம் – லோஷன்கள் வாங்குபவர்களுக்கு விசேட அறிவித்தல்

  • June 3, 2025
  • 0 Comments

இலங்கையில் கிறீம்களில் கன உலோகங்களின் அளவு அங்கீகரிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் சந்தையில் இருந்து பெறப்பட்ட சருமப் பூச்சு கிறீம்கள் மற்றும் லோஷன்களின் மாதிரிகளைப் பரிசோதித்த பின்னர், இந்த விடயம் தெரியவந்துள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின்படி, பரிசோதிக்கப்பட்ட கிறீம்கள் மற்றும் லோஷன்களின் வியாபாரப் பெயர்களும் அவற்றில் உள்ள கன உலோகங்களின் அளவும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கன உலோக அளவுகளுடன் கூடிய வர்த்தமானி அறிவிப்பின் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. […]

செய்தி விளையாட்டு

ஓய்வை அறிவித்த தென் ஆப்பிரிக்க வீரர் கிளாசன்

  • June 2, 2025
  • 0 Comments

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக விளங்குபவர் கிளாசன். அவர் IPLல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிளாசன் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 60 ஒருநாள் போட்டியில் விளையாடி, 2,141 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக […]