செய்தி விளையாட்டு

ஓய்வை அறிவித்த தென் ஆப்பிரிக்க வீரர் கிளாசன்

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக விளங்குபவர் கிளாசன். அவர் IPLல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிளாசன் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

அவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 60 ஒருநாள் போட்டியில் விளையாடி, 2,141 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 174 ரன்கள் குவித்துள்ளார்.

58 டி20 போட்டிகள் விளையாடிய இவர் 1,000 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 81 ரன்கள் எடுத்துள்ளார்.

4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கிளாசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 2024ம் ஆண்டே ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி