அமெரிக்காவில் இறந்து எட்டு நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்று எழுந்த பெண்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் சுமார் 8 நிமிடங்கள் உயிரிழந்த நிலையில், மீண்டும் அவர் உயிர் பெற்றார். இதற்கிடையே உயிரிழந்த போது தனது உடலுக்கு என்ன நடந்தது. அப்போது என்ன உணர்ந்தேன் என்பது உள்ளிட்ட தகவல்களை அந்த பெண் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த பிரியானா லாஃபெர்டி என்ற பெண்ணே இந்த சமபவத்திற்கு முகம்கொடுத்துள்ளார். தனது உடலுக்கு மேலே தானே மிதந்தது போலவும், டைம் என்ற ஒன்றே இல்லாத ஒரு உலகத்திற்குள் நுழைந்தது போலவும் உணர்ந்ததாகக் கூறியுள்ளார். […]













