ஆசியா

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரை தீர்க்கும் மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை!

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரை தீர்க்கும் நோக்கில் புதிய சுற்று பேச்சுவார்த்தைகள்  இன்று (09.06) ஆரம்பமாகவுள்ளன.

உலக வளர்ச்சியை அச்சுறுத்தும் உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான பதட்டங்களைத் தீர்க்க, வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் உள்ளிட்ட மூத்த அமெரிக்கக் குழு, துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் போன்ற சீன பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நவீன தொழில்நுட்பத்திற்கு மிக முக்கியமானதாக இருக்கும் சீன அரிய மண் தாதுக்களின் ஏற்றுமதி, அத்துடன் கணினி சில்லுகள் உட்பட அமெரிக்க தயாரிப்புகளை பெய்ஜிங் அணுகுவது ஆகியவை நிகழ்ச்சி நிரலில் அதிகமாக கலந்துரையாடப்படும் எனவும் கூறப்படுகிறது.

கடந்த மாதம், வாஷிங்டனும் பெய்ஜிங்கும் வர்த்தக கட்டணங்கள் தொடர்பாக ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை ஒப்புக் கொண்டன, ஆனால் அதன் பின்னர் ஒவ்வொரு நாடும் ஒப்பந்தத்தை மீறியதாக மற்றொன்று குற்றம் சாட்bயமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்