இலங்கை செய்தி

கிளிநொச்சி – சாந்தபுரத்தில் அரங்கேறிய கொடூரம்: சிறுவன் உட்பட மூவர் கைது

கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் 26 வயதுடைய யுவதி ஒருவர் மீது நேற்று திங்கட்கிழமை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் முறையே 17, 18 மற்றும் 20 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் 26 வயதுடைய யுவதி ஒருவர் மீது நேற்று திங்கட்கிழமை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் முறையே 17, 18 மற்றும் 20 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவத்துடன் தொடர்புடைய மூவரில் 17 வயதுடைய சிறுவன் ஒருவனும் உள்ளடங்குகின்றமை பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்தச் சோதனைகளின் போது, சந்தேகநபர்கள் மூவரும் கஞ்சா மற்றும் ஐஸ் உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருள்களைப் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் காயமடைந்த 26 வயதுடைய யுவதி சிகிச்சைக்காகக் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட 17 வயதுச் சிறுவன் உட்பட மூன்று சந்தேகநபர்களையும் இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளைக் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை