ஆசியா

ஜப்பானில் அமெரிக்க இராணுவ தளத்தில் விபத்து – 04 ஜப்பானிய வீரர்கள் படுகாயம்!

  • June 9, 2025
  • 0 Comments

ஜப்பானின் தெற்கு தீவான ஒகினாவாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் வெடிபொருட்களை சேமித்து வைக்கும் இடத்தில் ஏற்பட்ட வெடிப்பில் நான்கு ஜப்பானிய வீரர்கள் காயமடைந்துள்ளனர். இருப்பினும் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். ஒகினாவா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு நிலையத்தில் போர்க்காலத்தைச் சேர்ந்த வெடி பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. கடேனா விமானத் தளத்தின் வெடிமருந்து சேமிப்புப் பகுதியில் ஒகினாவா மாகாண அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் வசதிக்குள் வெடிப்பு ஏற்பட்டதாக அமெரிக்க விமானப்படை ஒரு அறிக்கையில் […]

இலங்கை

இலங்கையில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை வழங்க திட்டம்!

  • June 9, 2025
  • 0 Comments

இலங்கையில் பொது பாதுகாப்பு அமைச்சகம், செயலில் உள்ள இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை காவல் சேவையில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. தம்புத்தேகம காவல் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த நபர்களை 05 வருட காலத்திற்கு பணியமர்த்துவதற்கான தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர், போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயத்தில் […]

பொழுதுபோக்கு

ஒரே வண்ண ஆடை குறித்து ஓபனாக பேசிய கெனிஷா

  • June 9, 2025
  • 0 Comments

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற உறுதியாக இருக்கும் நிலையில், இந்த வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க, அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமணத்தில் பாடகி கெனிஷா உடன் ரவி மோகன் கலந்துகொண்டதால், அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கடுப்பான ஆர்த்தி தன் குழந்தைகள் குறித்தும் அவரது திருமண வாழ்க்கை குறித்தும் பதிவு ஒன்றை […]

இலங்கை

இலங்கையில் கொழும்பின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

  • June 9, 2025
  • 0 Comments

இலங்கையில் ஜூன் 11 ஆம் திகதி கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு விதிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும். பேலியகொட, வத்தளை, ஜா-எல, சீதுவ நகர சபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவங்கொட பிரதேச சபை பகுதி மற்றும் […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

கலிபோர்னியாவில் பதற்ற நிலைமை – குடியேற்ற போராட்டங்களை அடக்க தீவிர முயற்சி

  • June 9, 2025
  • 0 Comments

கலிபோர்னியாவில் டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களால் நிலவும் பதற்ற நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இன்றியும் சட்ட​விரோத​மாக​வும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் தீர்மானத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தமைக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. லொஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் தொகையில் கணிசமானோர் ஹிஸ்பானிக் மற்றும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான பின்னணியிலேயே அமெரிக்காவில் முறையான […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

நயன் – விக்கி திருமண நாளை எப்படி கொண்டாடி இருக்காங்க தெரியுமா?

  • June 9, 2025
  • 0 Comments

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 2022ம் ஆண்டு இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது வாழ்க்கையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் எடுக்கும் புகைப்படங்களை நயன்தாரா பதிவிடுவார். அந்த வகையில் நேற்று நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நாளாகும். வெளிநாட்டில் தங்கள் திருமண […]

இலங்கை

இலங்கையில் சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரிப்பு

  • June 9, 2025
  • 0 Comments

இலங்கையில் சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான வானிலையால் சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரித்துள்ளது. சுவாச நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானம் தொடர்பான விசேட வைத்தியர் அத்துல லியனபத்திரன பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது பொருத்தமானதென அவர் கூறினார். சுவாச நோய்கள் தொடர்பில் […]

பொழுதுபோக்கு

கமல்ஹாசன் ப்ரோமோஷனிற்கு அணிந்த சன் க்ளாஸ் எவ்வளவு தெரியுமா?

  • June 9, 2025
  • 0 Comments

கமல்ஹாசனின் தக் லைப் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. படத்தை ப்ரோமோஷன் செய்ய கமல்ஹாசன் மற்றும் படக்குழு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இருப்பினும் தியேட்டர்களில் படம் பார்த்த ரசிகர்கள் சுமாரான ரெஸ்பான்ஸ் தான் கொடுத்து வருகின்றனர். கமல்ஹாசன் தக் லைப் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த சன் க்ளாஸ் பற்றிய விவரம் தான் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது. Yohji Yamamoto என்ற ஜப்பான் நிறுவனத்தின் YY7013 என்ற மாடல் சன் க்ளாஸ் […]

வாழ்வியல்

நடைபயிற்சி மூலம் 2 மாதங்களில் இலகுவாக உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்

  • June 9, 2025
  • 0 Comments

தினமும் 7,000 அடிகள் நடப்பதால் உடலுக்குள் நடக்கும் அற்புத மாற்றங்களை இங்கு காணலாம். நடைபயிற்சி அனைத்து வழிகளிலும் உடல் நலத்திற்கு உதவக்கூடிய பயிற்சியாகும். ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நடைபயிற்சி அவசியமானதாகும். வார இறுதி நாட்களும் நடக்க வேண்டும். நீங்கள் 10 ஆயிரம் காலடிகள் நடக்காவிட்டாலும் 7,000 அடிகள் நடக்கலாம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எடையை கட்டுக்குள் வைக்கவேண்டும். மனநிலையை மேம்படுத்துவதோடு, ஆற்றல் மட்டங்களையும் அதிகரிக்கும். நாள்பட்ட நோய்களான இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். […]

வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் புதிய சட்டம் இன்று அமல்

  • June 9, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயணத் தடை இன்று அமலுக்கு வருகிறது. அதற்கமைய, ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ, கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோங்கா, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பகுதி பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை எடுப்பதாக ஜனாதிபதி டொனால்ட் […]