பொழுதுபோக்கு

சக்தி திருமகன் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்

  • September 21, 2025
  • 0 Comments

அருண் பிரபு இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகி இரண்டு தினங்களுக்கு முன் திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் சக்தி திருமகன். இப்படத்தில் இசையமைப்பாளரும், பிரபல நடிகருமான விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து சுனில் கிற்பலனி, வாகை சந்திரசேகர், திருப்பதி ரவிந்த்ரா ஆகியோர் நடித்திருந்தனர். அரசியல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ள சக்தி திருமகன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், வெளியாகி இரண்டு நாளில் இப்படம் செய்துள்ள பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் […]

இலங்கை

இலங்கையில் கடன் அட்டை மூலம் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

  • September 21, 2025
  • 0 Comments

Debit and Credit card  மூலம் பணம் செலுத்துவதில் விதிக்கப்படும் கூடுதல் கட்டணங்களை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் உள்நாட்டு வருவாய் துறை (IRD) ஆகியவற்றுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிவர்த்தனைகளுக்கு கார்டுகளைப் பயன்படுத்தும் போது நுகர்வோர் தற்போது சந்திக்கும் இழப்புகளை ஈடுசெய்வதற்கான வழிமுறைகளை ஆராய்வது குறித்தும் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். எதிர்காலத்தில் அனைத்து பரிவர்த்தனைகளும் […]

பொழுதுபோக்கு

மலையாளத்தில் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த லோகா திரைப்படம்

  • September 21, 2025
  • 0 Comments

மலையாளத்தில் வெளிவந்து வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் லோகா. இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். கல்யாணி ப்ரியதர்ஷன் கதையின் நாயகியாக நடிக்க நஸ்லன், சாண்டி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் டொமினிக் அருண் இப்படத்தை இயக்கியிருந்தார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் பட்டைய கிளப்பி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த படமாக வலம் வருகிறது. அந்த வகையில், தற்போது லோகா திரைப்படம் ரூ. 265 கோடிக்கு மேல் வசூல் செய்து மலையாளத்தில் […]

உலகம்

UN தடைகள் நிவாரணத்தைத் தடுத்ததைத் தொடர்ந்து,IAEA உடனான ஒத்துழைப்பை நிறுத்திய ஈரான்

  • September 21, 2025
  • 0 Comments

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெஹ்ரான் மீதான தடைகளை நிரந்தரமாக நீக்குவதற்கு எதிராக வாக்களித்ததை அடுத்து, சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்தி வைப்பதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அரசு நடத்தும் பிரஸ் டிவி வெளியிட்ட அறிக்கையில், ஈரானின் உயர் பாதுகாப்பு அமைப்பு, E3 என அழைக்கப்படும் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக தவறான நடவடிக்கைகளை கண்டனம் செய்தது. வெள்ளிக்கிழமை, 2015 கூட்டு விரிவான […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை – கடும் கண்டனம் தெரிவித்த ஈரான்!

  • September 21, 2025
  • 0 Comments

இஸ்ரேலுக்கு மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க உரிமை இல்லை என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஸ்கோவ் கூறியுள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவை ஆக்கிரமிக்க தீவிரமான தரைவழி தாக்குதல்களை தொடங்கியுள்ளார். அங்கிருந்து மக்கள் வெளியேற 48 மணிநேரம் கால அவகாசத்தை  முன்னதாக வழங்கியிருந்தார்.  இருப்பினும் அங்கிருக்கும் மக்கள் ஒருமுறை வெளியேறினால் மீண்டும் அங்கு வர முடியாது என்ற அச்சத்தில் அங்கேயே இருக்க விருப்புதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஸ்கோவ்  கடுமையான […]

இந்தியா செய்தி

H-1B விசாக்களுக்கான கட்டணத்தை உயர்த்திய ட்ரம்ப் நிர்வாகம் – இந்தியா விடுத்த எச்சரிக்கை!

  • September 21, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  H-1B விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியுள்ளார். ட்ரம்பின் இந்த புதிய உத்தரவு இன்று (21.09) முதல் அமுலுக்கு வந்துள்ளது. குறிப்பாக இந்த விசாவை அதிகளவில் சார்ந்திருப்பவர்கள் இந்தியர்கள் தான். பெரும்பாலான இந்திய பிரஜைகள் இந்த விசாவின் கீழ் அமெரிக்காவில் பணிப்புரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஏறக்குறைய 70 சதவீதமான இந்தியர்கள் இந்த திடீர் அறிவிப்பால் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த தீர்மானமானது தற்போதைய விசாக்கள் […]

பொழுதுபோக்கு

மூக்குத்தி அம்மனில் இணைந்த அந்த நடிகை

  • September 21, 2025
  • 0 Comments

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020 – ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். நேரடியாக OTT -யில் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இதில் நயன்தாராவுடன் ரெஜினா, இனியா, யோகி பாபு, சிங்கம் புலி மற்றும் கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய […]

செய்தி

பலஸ்தீனத்தை ஆதரிக்கும் உலக நாடுகள் – காசா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்

  • September 21, 2025
  • 0 Comments

உலக நாடுகளை பழிவாங்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கும் உடன்படிக்கைக்கு ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா உட்பட 10 நாடுகள் நாளையதினம் ஆதரவு தெரிவிக்கவுள்ளன. ஐ.நா பொதுச்சபையில் பலஸ்தீனம் தொடர்பான வாக்கெடுப்பின் போது இந்த நாடுகள் ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனர். இந்நிலையில் பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்றையதினம் நடத்திய தாக்குதல் சுமார் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. […]

செய்தி

கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறைக்குள் சிக்கிய மர்மம் – காட்டிக்கொடுத்த நபர்

  • September 21, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தின் ஆண்கள் கழிப்பறைக்குள் இருந்து போதைப்பொருள் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 18.5 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கழிப்பறைக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் பல பொதிகள் இருந்தமையை துப்புரவு பணியாளர் ஒருவர் கண்டுள்ளார். இது குறித்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதன்போது பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 422 […]

இலங்கை

அமெரிக்கா செல்லும் இலங்கை ஜனாதிபதி – பல்வேறு அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

  • September 21, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளையதினம் அமெரிக்கா நோக்கி பயணமாகவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அமர்வில் கலந்து கொள்ளும் நோக்கில் அவரின் விஜயம் அமைந்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐ.நா சபையில் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார். இந்த விஜயத்தின் போது பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது இலங்கையின் சமகால முன்னேற்றம் குறித்தும் தெளிவுபடுத்தவுள்ளார். அதேவேளை அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு […]