இலங்கையில் மனைவியை சுட்டுக்கொலை செய்த தந்தை
மொனராகலை மாவட்டத்தின் மெதகம, பலகஸ்ஆர பகுதியில் நேற்று, கணவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மனைவி உயிரிழந்துள்ளார். பலகஸ்ஆர வீதிக்கு அருகில் பெண்ணொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது குறித்த பெண் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் குறித்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், உள்நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.













