உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்கள் தொடர்பான பட்டியல் வெளியானது

உலகின் பாதுகாப்பான விமான நிறுவனமாக குவாண்டாஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகளவில் 142 விமான நிறுவனங்களை பகுப்பாய்வு செய்து உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்களை 42kft.com பட்டியலிட்டுள்ளது.
இந்த பட்டியலில் அவுஸ்திரேலிய விமான நிறுவனமான குவாண்டாஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.
குவாண்டாஸ் விமான சேவையில் சிறந்த பயிற்சி பெற்ற, மிகவும் ஒழுக்கமான மற்றும் மிகவும் தொழில்முறை விமானிகள் பணியாற்றுவதாக கூறப்பட்டுள்ளது.
குவாண்டாஸின் பாதுகாப்பு அமைப்புகள் சிறந்தவை என அதன் தலைமை ஆசிரியர் ஜெப்ரி தோமஸ் கூறினார்.
கடந்த 60 ஆண்டுகளில் குவாண்டாஸ் எப்போதும் அதன் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
ஆராய்ச்சிகளுக்கமைய, கட்டார் ஏர்வேஸ் இரண்டாவது பாதுகாப்பான விமான நிறுவனமாக பெயரிடப்பட்டுள்ளது.
மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே எயார் நியூசிலாந்து, கேத்தே பசிபிக் எயார்வேஸ் மற்றும் எமிரேட்ஸ் ஆகியவைகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
விர்ஜின் அவுஸ்திரேலியா ஆறாவது இடத்தைப் பிடித்தது, மேலும் இரண்டு அவுஸ்திரேலிய விமான நிறுவனங்கள் பாதுகாப்பான நிறுவனங்களாக பெயரிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.