இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாப்பட்டுள்ளது.

இது தொடர்பான இந்திய பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ்தள பதிவு வருமாறு ,

” கொழும்பில் இன்று இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் மிகச் சிறந்த முறையில் உயர்மட்டச் சந்திப்பு ஒன்றினை நடத்தினேன்.

பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவரது அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

நாகரிகத் தொடர்புகளைக் கொண்ட நெருங்கிய அண்டை நாடுகள் மற்றும் கடல்சார் பங்காளிகள் என்ற முறையில், இந்தியாவும் இலங்கையும் நமது இரு நாடுகளின் வளர்ச்சிக்கும், நமது இரு நாட்டு மக்களின் நலனுக்கும், நமது பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கும் தொடர்ந்து இணைந்து செயல்படுவதற்கான நமது உறுதியை மீண்டும் வலியுறுத்தினோம்.” – என்றுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை