இலங்கை செய்தி

வீட்டுத்திட்ட நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பம்

  • January 6, 2025
  • 0 Comments

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதன் முக்கிய நோக்கம் ஒவ்வொரு தனிநபருக்கும் வீட்டு உரிமையை வழங்குவதாகும். இதன்படி, முன்னுரிமை அடிப்படையில் உரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை, வசதியான வீட்டு உரிமையில்லாத கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 65,000 பேர் கொழும்பு நகர எல்லையில் வசிப்பதாக கூறப்படுகிறது. இதன்படி, […]

செய்தி வட அமெரிக்கா

தலைமையில் இருந்து விலகும் கனடா பிரதமர்

  • January 6, 2025
  • 0 Comments

லிபரல் கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் லிபரல் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சிக் கூட்டத்திற்கு முன்னதாக அவர் பதவி விலகப் போவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், அவர் உடனடியாக கட்சியின் தலைமைப் பதவியை விட்டு விலகுவாரா அல்லது வாரிசு தெரிவு செய்யப்படும் வரை அந்த பதவியில் நீடிப்பாரா என்பது தொடர்பில் அவர் குறிப்பிட்ட கருத்தை வெளியிடவில்லை என […]

உலகம் செய்தி

சிரியா – டமஸ்கஸில் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பம்

  • January 6, 2025
  • 0 Comments

சிரியாவின் டமஸ்கஸ் விமான நிலையத்தில் இருந்து நாளை 07 முதல் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பஷர் அல் அசாத்தின் ஆட்சி வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து டமஸ்கஸ் விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவைகள் மறுஅறிவித்தல் வரும் வரை நிறுத்தப்பட்டன. அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை முதல் டமஸ்கஸ் விமான நிலையத்தின் ஊடான சர்வதேச விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.

இலங்கை செய்தி

விளையாட்டு மேம்பாட்டுக்காக நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்குவோம் – இந்திய உயர்ஸ்தானிகர்

  • January 6, 2025
  • 0 Comments

இந்திய உயர்ஸ்தானிகர் (Santosh Jha) மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோர் இன்று(06) இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சில் சந்தித்தனர். இந்த நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர். விளையாட்டு மேம்பாட்டுக்காக நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும், கிரிக்கெட் உள்ளிட்ட பிற விளையாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு […]

இலங்கை செய்தி

ஆட்டோக்களில் கண்டதையும் தொங்கவிட்டால் சிக்கல்!  

  • January 6, 2025
  • 0 Comments

முச்சக்கர வண்டிகளில் பாகங்கள் பொருத்துவதற்கும் அலங்காரம் செய்வதற்கும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வகைகளின் கீழ் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட குறிப்பிட்டுள்ளார். “முச்சக்கர வண்டியில் மாற்றம் செய்வதாயின், அதன் உண்மையான தன்மையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாமல், உரிய மாற்றங்கள் வாகனத்தின் புத்தகத்தில் குறிப்பிடப்படல் வேண்டும். அப்போது, சோதனை செய்யும் பொலிஸாரால், அந்த மாற்றங்கள் போக்குவரத்து திணைக்களத்துக்கு பணம் செலுத்தி, உரிய அனுமதியுடன்தான் […]

இலங்கை செய்தி

16 வயது மாணவியை 3 நாட்களாகக் காணவில்லை 

  • January 6, 2025
  • 0 Comments

16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பதுளை- அட்டம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் இது தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளார். ஜனவரி 3ஆம் திகதி முதல் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி, சுமார் 5 அடி 2 அங்குல உயரமும் சாதாரண உடலமைப்பும் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இறுதியாக வெளிர் பச்சை நிற, நீளமான சட்டை அணிந்திருந்ததாகவும், அவரது இடது கையின் […]

பொழுதுபோக்கு

பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சையா? நடந்தது என்ன? வெளிவந்த உண்மை…

  • January 6, 2025
  • 0 Comments

பிரபல நடிகரும் நடிகர் சிவாஜி கணேசனின் மகனுமான பிரபுவுக்கு சமீபத்தில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் கிடைத்துள்ள தகவலின்படி, பிரபு தற்போது நலமுடன் இருப்பதாகவும், உடல்நிலை சீராகவும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நடிகர் பிரபு கடுமையான தலைவலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவரது மூளையில் அனீரிஸம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஒரு தமனியில் வீக்கம் காணப்பட்டது. இதனால் உடனடி அறுவை சிகிச்சை செய்ய முடிவு […]

உலகம்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு! 7 மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனம்!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அதிக பனிப் பொழிவுடனான கடும் குளிர் காலநிலை மேலும் பல மாநிலங்களைத் தாக்கியுள்ளது. பெரும்பாதிப்பிற்கு உள்ளான 30 மாநிலங்களில் சிலவற்றில் கடுமையான காற்று மற்றும் இடியுடனான கடும் மழை பெய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. துருவத்தில் சுழலினால் ஏற்பட்ட புயல் மத்திய அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கியுள்ளது. ஆர்கன்சாஸ், கென்டக்கி, மிசோரி மற்றும் வர்ஜீனியா உள்ளிட்ட பல மாநிலங்கள் புயலை முன்னிட்டு அவசரகால நிலையைப் பிறப்பித்தன. வாஷிங்டன், டிசி ஞாயிறு […]

இலங்கை

வாகன தணிக்கைக்கு எதிர்ப்பு: இலங்கை பொலிஸார் விளக்கம்

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட வாகனத் தணிக்கை நடவடிக்கையைத் தொடர்ந்து விபத்துக்கள் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, 2024 டிசம்பர் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கை மிகவும் வெற்றிகரமானதாக இருந்தது. உயிரிழக்கும் வீதி விபத்துக்கள் நாளொன்றுக்கு 04 முதல் 05 சம்பவங்கள் வரை குறைந்துள்ளதுடன், பாரதூரமான விபத்துக்கள் அல்லது கடுமையான காயங்களுக்கு உள்ளானவை 08-10 சம்பவங்களால் குறைந்துள்ளதாகவும் […]

இலங்கை

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் தங்களின் பிறப்பு, இறப்பு, திருமண சான்றுதழ்களை பெற்றுக்கொள்ள டிஜிட்டல் வசதி!

  • January 6, 2025
  • 0 Comments

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் வகையில் டிஜிட்டல் வசதிகள் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தின் பிரகாரம் அது அமைந்துள்ளது. இதன்படி, 07 தூதரகங்களுக்கு இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், ஜப்பான், கத்தார், குவைத், மிலன், ரொறன்ரோ, மெல்பேர்ன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளின் துணைத் தூதரகங்கள் அந்த […]