இலங்கை

இலங்கையில் வீசா இன்றி தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் சுற்றிவளைப்பு

  • November 19, 2024
  • 0 Comments

இலங்கையில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுநாயக்க பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த அனைவரும் கைதாகினர். கைதான அனைவரும் பங்களாதேஷ் பிரஜைகளாவர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசியா

சீனாவில் பாடசாலை மீது மோதிய கார் – படுகாயமடைந்த மாணவர்கள்

  • November 19, 2024
  • 0 Comments

சீனாவின் ஹூனான் மாநிலத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றுக்கு வெளியே கார் மோதியதில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பிள்ளைகள் பதற்றத்தில் ஓடுவதும் காயமுற்ற சிலர் தரையில் கிடப்பதும் சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளிகளில் தெரிந்தது. இன்னொரு காணொளியில் நபர் ஒரு வழிப்போக்கர்களால் அடிக்கப்படுவது தெரிகிறது. அவர் SUV ரகக் காருக்குப் பக்கத்தில் தரையில் கிடக்கக் காணப்பட்டார். சீனாவில் கூட்டத்துக்குள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்கின்றன. சென்ற வாரம் சூஹாய் (Zhuhai) நகரில் நபர் ஒருவர் கூட்டத்திற்குள் காரைச் செலுத்தியதில் […]

வாழ்வியல்

நூறு நோய்களுக்கு மருந்தாகும் நெல்லிக்காய்… தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

  • November 19, 2024
  • 0 Comments

நெல்லிக்காயின் மருத்துவ பண்புகள் காரணமாக, ஆயுர்வேதத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் ஏபி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, டையூரிடிக் அமிலம் போன்ற ஊச்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் நெல்லிக்காயில் ஏராளமாக உள்ளன. இதனை உட்கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி, பல நோய்களை முழுமையாக குணப்படுத்தும் திறன் கொண்டது. ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்துள்ள பவர்ஹவுஸ் என அழைக்கப்படும் […]

செய்தி

எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றிய அமெரிக்கா – கடும் கோபத்தில் ரஷ்யா

  • November 19, 2024
  • 0 Comments

எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் செயலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஈடுபட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது. நெடுந்தொலைவு ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பாய்ச்ச அமெரிக்கா அனுமதி அளித்திருக்கிறது. எனினும் அது குறித்து இன்னும்அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அவற்றைப் பயன்படுத்தும்போது உண்மை தெரியவரும் என்று உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார். ஏவுகணைகளே இனி பேசும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கர்ஸ்க் வட்டாரத்தின் சிறு பகுதிக்குள் நெடுந்தொலைவு ஏவுகணைகளைப் பாய்ச்ச உக்ரேனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்திருப்பதாகத் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

தேசியப் பட்டியல் உறுப்பினராகிய நாமல் – ரணிலின் உத்தரவை மீறி ரவி கருணாநாயக்கவின் பெயர்

  • November 19, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாமல் ராஜபக்சவின் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இலங்கை தமிழரவு கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கத்தின் பெயர் உரிய வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பதவிகள் தொடர்பிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் என்ற வகையில் ரவி கருணாநாயக்கவின் பெயர் உரிய வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்

  • November 19, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மாற்றமடைந்துள்ளது. இன்றைய தினம் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.93 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.30 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.950 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஐரோப்பா

ரஷ்யாவில் 7 வயது சிறுவனின் செயல் – வேலை வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிறுவனம்

  • November 19, 2024
  • 0 Comments

ரஷ்யாவில் ஒரு மென்பொருள் நிறுவனம் 7 வயதுச் சிறுவனுக்கு வேலை வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. செர்கெய் என்ற அந்தச் சிறுவன் சம்பளம் பெறும் வயதை எட்டியவுடன் தனது நிர்வாகக் குழுவில் சேர்ந்துவிடலாம் என்று Pro32 எனும் அந்த நிறுவனம் கூறியது. செர்கெய் ஐந்து வயதிலிருந்து மென்பொருள் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதாக தெரியவந்துள்ளது. ரஷ்யச் சட்டத்தின் கீழ் ஒருவர் 14 வயதான பின்பு தான் சம்பளம் பெறும் வேலையில் சேர முடியும். அது வரை செர்கெயுடன் வேறு […]

இலங்கை

இலங்கையில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை! காலநிலை தொடர்பில் எச்சரிக்கை

  • November 19, 2024
  • 0 Comments

இலங்கையில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ மற்றும் வடமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். அத்துடன் மேல், சபரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் […]

விளையாட்டு

விராட் கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்

  • November 19, 2024
  • 0 Comments

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார். பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மட்டும் கடைசி டி20 போட்டி  நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. விராட் கோலி சாதனை […]

ஐரோப்பா

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பிரித்தானிய ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

  • November 19, 2024
  • 0 Comments

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 36% பேருக்கு மனஅழுத்தம் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லான்செட் மருத்துவ அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாராந்திர மருத்துவ இதழான லான்செட். சர்க்கரை நோய் தொடர்பான பாதிப்பு குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உட்கொள்வதில் இயல்பான நிலை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 63% பேர் அச்சம் உணர்வு இருந்து கொண்டே இருப்பதாகவும், 28% பேருக்கு நோய் குறித்து நேர்மறையாக யோசிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]