இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ஐரோப்பாவில் மேலும் 4,000 வேலைகளைக் குறைக்கும் ஃபோர்ட் நிறுவனம்

  • November 22, 2024
  • 0 Comments

ஐரோப்பாவில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் எரிசக்தி வாகனத்தைத் தவிர்த்து மின் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இந்த மாற்றத்தால் ஃபோர்ட் நிறுவனம் போன்று எரிசக்தி வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தங்கள் நிதி நிலைமையைச் சரிசெய்யும் பொருட்டு அவ்வட்டாரத்தில் மேலும் 4,000 வேலைகளை நீக்க ஃபோர்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை ஐரோப்பிய வட்டாரத்தில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் கிட்டத்தட்ட 14 சதவீதமாகும். ஆட்குறைப்பு செய்வது குறித்து அரசாங்கங்களுடனும் தொழிற்சங்கங்களுடனும் ஃபோர்ட் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாகச் […]

இலங்கை

இலங்கையில் புதிய அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு: ஜப்பான்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஜப்பானிய உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் திறம்பட தொடர்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வீண்விரயம், ஊழலற்ற நாட்டை உருவாக்கி நாட்டை பொருளாதார ரீதியில் முன்னோக்கி கொண்டு செல்லும் அரசாங்கத்தின் புதிய கொள்கைக்கு […]

இலங்கை

இலங்கை: சர்ச்சையை கிளப்பிய வீடியோ! யாழ் எம்.பி வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு

நவம்பர் 22 – யாழ்.மாவட்டத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினரான டொக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளது. டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவில் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியதை சிஐடி விசாரிக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர். நவம்பர் 21ஆம் திகதி சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ, 10வது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவருக்கு […]

பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனுடன் காதல்? திருமணத்திற்கு தயாரான கீர்த்தி சுரேஷ் – வெடிக்கும் சர்ச்சை

  • November 22, 2024
  • 0 Comments

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிகர் விக்ரம் பிரபு ஜோடியாக 2015 ஆம் ஆண்டு வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, எஸ்.கே – கீர்த்தி காம்போவும் அதிகம் கவனிக்கப்பட்டது. எனவே மீண்டும் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ரெமோ படத்தில் இந்த ஜோடி இணைந்து நடித்திருந்தனர். […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட லெபனான் கால்பந்து நட்சத்திரம்!

முன்னணி லெபனான் கால்பந்து வீராங்கனையான செலின் ஹைதர், பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அருகே இஸ்ரேலிய தாக்குதலில் படுகாயமடைந்த பின்னர் மருத்துவ ரீதியாக கோமா நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அவரது சர்வதேச சாம்பியன்ஷிப் வாய்ப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரு இஸ்ரேலிய போர் விமானம் அவள் மோட்டார் சைக்கிள் மீது பாய்ந்தபோது தாக்கியது. மண்டை எலும்பு முறிவுகள் மற்றும் மூளையில் ரத்தக்கசிவு உட்பட பலத்த மூளைக் காயங்களுக்கு ஆளான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் […]

பொழுதுபோக்கு

நாக சைதன்யா – சோபிதா திருமணம் குறித்து நாகர்ஜுனா பகிர்ந்த தகவல்

  • November 22, 2024
  • 0 Comments

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, தனது மகன் நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவின் திருமணம் குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ளார். நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் ஆடம்பரமான இந்திய திருமணத்தை விரும்பவில்லை என்றும், இப்போது அனைத்தும் அவர்களின் விருப்பப்படியே திட்டமிடப்பட்டு வருவதாக நாகர்ஜுனா தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியுள்ளார். “சைதன்யாவும் சோபிதாவும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்வதை விரும்புகின்றனர். எனவே இதற்கான ஏற்பாடுகளை அவர்களிடமே விட்டுவிடுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர். […]

இலங்கை

இலங்கை: பாதுகாப்பு அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் பொதுவான நோக்கத்துடன் ஒன்றிணைந்து தாயகத்தை சிறந்த தேசமாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார். புதிய பாதுகாப்பு அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு இன்று (22) விஜயம் செய்த போதே அவர் இதனை தெரிவித்தார். வருகை தந்த ஜனாதிபதியை பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள் அன்புடன் வரவேற்றனர். வரவேற்பைத் தொடர்ந்து, முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் […]

இலங்கை

இலங்கை தொடர்பில் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

வெளிநாட்டுக் கடன்கள் ஊடான அழுத்தங்கள் குறைக்கப்படும் போது, நாட்டின் வங்கிச் செயற்பாடுகளை இலகுபடுத்த முடியும் என ஃபிட்ச் ரேட்டிங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் வங்கிச் செயற்பாடுகள் கடந்த பொருளாதார நெருக்கடிக் காலத்தில் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி இருந்தன. எனினும் அடுத்தக்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக அந்தச் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் விளைவால் ஏற்படுகின்ற இறையாண்மை அழுத்தக் குறைப்பின் காரணமாக, வங்கிகளின் செயற்பாட்டுச் சூழ்நிலை இலகுபடுத்தப்படும். […]

மத்திய கிழக்கு

காஸா பகுதியில் வான்வழி தாக்குதலில் 3 ஹமாஸ் கமாண்டர்கள் கொலை – இஸ்ரேல் ராணுவம்

  • November 22, 2024
  • 0 Comments

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு ஏஜென்சி (ISA) மூன்று தளபதிகள் உட்பட ஐந்து ஹமாஸ் போராளிகளை வான்வழித் தாக்குதலில் கொன்றதாக ஐடிஎஃப் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ISA இன் உளவுத்துறை வழிகாட்டுதல் மற்றும் பீரங்கி மற்றும் கவசப் பிரிவுகளின் ஆதரவுடன், வடக்கு காசா பகுதி நகரமான Beit Lahia இல்,புதன் மற்றும் வியாழன் இடையே ஒரே இரவில் இஸ்ரேலிய விமானப்படை விமானத்தால் தாக்குதல் நடத்தப்பட்டது என்று IDF தெரிவித்தது . அது […]

ஆசியா

வடகொரிய ஒலிபெருக்கிகளின் இரைச்சலால் தென்கொரிய எல்லையயில் உள்ள மக்கள் அவதி

  • November 22, 2024
  • 0 Comments

வடகொரியாவின் ஒலிபெருக்கிகளால் ஏற்படும் இரைச்சலால், தென்கொரிய எல்லையில் வசிப்பவர்கள் பல மாதகாலமாக அவதியுறுகின்றனர். இதனால் தங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலர் புலம்புவதை உள்ளூர் அரசாங்கங்கள் வியாழக்கிழமை (நவம்பர் 21) தெரிவித்தன. தென்கொரியாவின் கியோங்கி மாநிலம், கிம்போவில் மக்களின் மனநலனைக் கண்டறிய அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், 28 சதவீதமானோர் கடும் மனநலப் பிரச்சினைகளைச் சந்திப்பது தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் 8 முதல் 14 வரை கிம்போ நகரின் மனநல நிலையம் நடத்திய அந்த ஆய்வு, இரு கொரியாக்களின் எல்லையில் வசிக்கும் […]