உலகம்

காசா, உக்ரைன் போர்களுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையில் ஒன்றுகூடும் உலகத் தலைவர்கள்

  • September 19, 2024
  • 0 Comments

130 க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் சந்திக்கவுள்ளனர், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பரவும் அச்சுறுத்தலான போர்கள், அந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மெதுவான முயற்சிகளில் விரக்தி மற்றும் மோசமான காலநிலை மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள்.தொடர்பில் இதில் விவாதிக்கவுள்ளனர். காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளான ஹமாஸுக்கும் இடையிலான மோதலும் உக்ரைனில் ரஷ்யாவின் போரும் வருடாந்தர உயர்மட்ட ஐ.நா பொதுச் சபையில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இராஜதந்திரிகள் மற்றும் ஆய்வாளர்கள் […]

உலகம்

உக்ரைனுக்கு விற்கப்படும் இந்திய வெடி மருந்துகள் – அதிருப்தி வெளியிட்டுள்ள ரஷ்யா

  • September 19, 2024
  • 0 Comments

இந்திய ஆயுதத் தயாரிப்பாளர்களால் விற்கப்படும் வெடி மருந்துகள், ஐரோப்பிய வாடிக்கையாளர்களால் உக்ரைனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியா மீது ரஷ்யா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், இந்திய ஆயுதத் தயாரிப்பாளர்களால் விற்கப்படும் வெடி மருந்துகள், ஐரோப்பிய வாடிக்கையாளர்களால் உக்ரைனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆதாரங்கள் மற்றும் சுங்கத் தரவுகளின்படி, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனின் பாதுகாப்பை ஆதரிப்பதற்காக இத்தகைய பரிமாற்றங்கள் ஓர் ஆண்டுக்கும் மேலாக நிகழ்ந்துள்ளன. இந்திய ஆயுத ஏற்றுமதி […]

வட அமெரிக்கா

அமெரிக்கா – பயணிகளின் காது, மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்; மன்னிப்பு கோரிய டெல்டா விமான நிறுவனம்

  • September 19, 2024
  • 0 Comments

விமானத்தினுள் காற்றழுத்தம் குறைந்ததால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதற்காக அமெரிக்காவின் டெல்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.அச்சம்பவத்தின்போது பயணிகளின் பலரது காதிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தம் வழிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. செப்டம்பர் 15ஆம் திகதி சால்ட் லேக் சிட்டியிலிருந்து போர்ட்லேண்டிற்கு அவ்விமானம் சென்றபோது நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை விசாரித்து வருகிறது. மொத்தம் 140 பயணிகளுடன் பறந்த அவ்விமானம் 10,000 அடிக்குமேல் பறக்க முடியவில்லை என்று டெல்டா நிறுவனம், மின்னஞ்சல் மூலம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் […]

இலங்கை

இலங்கை: ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

  • September 19, 2024
  • 0 Comments

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசந்துறைக்கு இடையே விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, தேர்தல் பணிகளில் பங்கேற்கும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த ரயில்களில் பயணிக்க முடியும். இன்றும்(19) நாளை மறுதினமும்(21) காலை 9 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை விசேட ரயிலொன்று போக்குவரத்தில் ஈடுபடவுள்ளது. நாளை(20) மற்றும் எதிர்வரும் 22ஆம் திகதிகளில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை வரை 2 […]

உலகம்

செயற்கை நுண்ணறிவு அபாயங்களைக் கையாள்வது தொடர்பில் பரிந்துரைகளை வெளியிட்டுள்ள ஐ.நா

  • September 19, 2024
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு தொடர்பான அபாயங்களையும் அதை நிர்வகிப்பதில் இருக்கக்கூடிய குறைபாடுகளையும் கையாள ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழு ஒன்று, ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.அந்தப் பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை அக்குழு வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 19) வெளியிட்டது. அனைத்துலக அளவில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை நிர்வகிப்பதில் இருக்கக்கூடிய பிரச்சினைகளைக் கவனிக்க ஐநா சென்ற ஆண்டு 39 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்தது. அக்குழு இப்போது முன்வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து இம்மாதம் நடைபெறவுள்ள ஐநா […]

இலங்கை

சர்வதேச வர்த்தக கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் ஒன்றை எட்டிய இலங்கை!

  • September 19, 2024
  • 0 Comments

17.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைப்பதற்காக சர்வதேச வர்த்தக கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளது. அந்த கடன் தொகையின் தற்போதைய மதிப்பில் இருந்து 40.3% தள்ளுபடி பெறுவது சிறப்பு. இதன் மூலம் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க கடன் நிவாரணம் கிடைக்கும் எனவும், வட்டி கொடுப்பனவுகளை குறைப்பதன் மூலம் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் கூறுகிறது.

பொழுதுபோக்கு

“இட்லி கடை” அடுத்த சம்பவத்திற்கு தயாரானார் தனுஷ்..

  • September 19, 2024
  • 0 Comments

நடிப்பு, பாடகர் என்பதை தாண்டி இப்போது இயக்கத்திலும் பட்டையை கிளப்பி வருகிறார் தனுஷ். அந்த வகையில் சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் ராயன் படம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது தனுஷ் மீண்டும் தன்னுடைய இயக்கத்தில் ஒரு படத்தை நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு இட்லி கடை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இட்லி கடை படத்தை டாவன் பிக்சர்ஸ், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனங்கள் […]

உலகம்

தொடர்ச்சியாக மூக்கு வடிதல் பிரச்சினை : வைத்தியரை நாடிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • September 19, 2024
  • 0 Comments

சிரியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு அடிக்கடி சளியுடன் தொடர்புடைய மூக்கு வடிதல் பிரச்சினை இருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக தனக்கு என்ன நேர்ந்துள்ளது என்பதை கண்டறிய மருத்துவரை அணுகாமல் சளிக்கு எடுத்துக்கொள்ளும் பொதுவான மாத்திரைகளை அவர் பயன்படுத்தியதாக கூறியுள்ளார். அதாவது அவருக்கு தொடர்ச்சியாக மூக்கு வடிதல் பிரச்சினை இருந்துள்ளது. இதற்கு அவர் சாதாரண மாத்திரைகளை எடுத்துவந்துள்ளார். பின்னர் மருத்துவ பரிசோதனையில் மண்டை ஓட்டில் உள்ள திறப்புகள் மூலம் மூளைப் பொருள் வெளியேறும் ஒரு […]

பொழுதுபோக்கு

மனைவியின் உடந்தையுடன் பாலியல் துஷ்பிரயோகம்? நடன இயக்குநர் ஜானி கைது

  • September 19, 2024
  • 0 Comments

கடந்த 2019ஆண்டு ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்பிடிப்பு சென்ற இடங்களில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் ஆந்திராவின் ராய்துர்க்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் ஜானி மாஸ்டரின் மனைவியும் அதற்கு உடந்தையாக இருந்ததாக குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆந்திர போலீசார், ஜானி முதல் முதலாக பாலியல் தொல்லை கொடுத்த போது, அப்பெண்ணுக்கு 18வயது கீழ் இருந்துள்ளதால் அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்தனர். இதனிடையே […]

உலகம்

27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா: புதிய அலை உருவாகலாம் என எச்சரிக்கை

  • September 19, 2024
  • 0 Comments

எக்ஸ்இசி வேரியண்ட் (XEC variant) என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. புதிய வகை கொரோனா ஜூன் மாதத்தில் ஜெர்மனியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, அதன் பின்னர் இங்கிலாந்து, ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் தொற்று பரவி இருக்கிறது. அதிக தாக்கம் கொண்ட இந்த புதிய வகை திரிபு குறித்து இங்கிலாந்தில் […]

error: Content is protected !!