இலங்கை செய்தி

யாழில் குடும்பஸ்தரை சித்திரவதைக்குள்ளாக்கிய பொலிஸார்

  • September 2, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குடும்பஸ்தரை எவ்வித காரணமும் கூறாது கைது செய்துள்ளதாகவும், கைது செய்த பின்னர் அவரை சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக சமயத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த 28ஆம் திகதி நள்ளிரவு வேளை எமது வீட்டின் மதில் ஏறி பாய்ந்து , வீட்டின் முன் பக்க […]

இலங்கை செய்தி

நல்லூர் தீர்த்த திருவிழா

  • September 2, 2024
  • 0 Comments

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை நடைபெற்றது. காலை ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெற்றது. இன்றைய தீர்த்த திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக […]

ஐரோப்பா

இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30ஐ இடைநிறுத்தியுள்ள இங்கிலாந்து!

சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கடுமையாக மீறுவதற்கு இதுபோன்ற கருவிகள் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதால், இஸ்ரேலுடனான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30ஐ பிரிட்டன் உடனடியாக நிறுத்தி வைக்கும் என்று வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி திங்களன்று தெரிவித்தார். உரிமங்களை இடைநிறுத்துவதற்கான முடிவு ஒரு போர்வைத் தடை அல்லது ஆயுதத் தடைக்கு சமமானதல்ல, ஆனால் பாலஸ்தீனப் பகுதியான காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் பயன்படுத்தக்கூடியவை மட்டுமே சம்பந்தப்பட்டதாக லாம்மி கூறியுள்ளார். ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் தொழிற்கட்சி […]

இலங்கை

இலங்கை: மனைவியைக் கொன்ற கணவனுக்கு மரண தண்டனை

தனது மனைவியைக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஊவா மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி கெந்தெகொல்ல கிராமத்தில் உள்ள அவரது மனைவி திஸாநாயக்க முதியன்சேலாகே சந்திரவதி (35) என்பவரை அவர்களது வீட்டில் வைத்து அவர் தாக்கி கொலை செய்துள்ளார். அவரது மனைவிக்கு வேறு ஒரு நபருடன் இருந்த ரகசிய உறவால் ஏற்பட்ட குடும்பத் தகராறே […]

இலங்கை

இலங்கை: தபால் மூலம் வாக்களிப்பு! பொய்யான வாக்குறுதிகளுக்கு எதிராக அமைச்சர் எச்சரிக்கை

தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விடாமல் தபால் மூலம் வாக்களிக்கும் போது அவதானமாக இருக்குமாறு அரசாங்க ஊழியர்களிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அந்தந்த அரசியல் கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதிலும் அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகள் உள்ளடக்கப்படவில்லை. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஞ்ஞாபனத்தில் அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் உள்ளடக்கப்படுவதற்குப் பொருத்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார். […]

ஆஸ்திரேலியா

அறுபதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை; ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலியர்!

  • September 2, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவிலும் இத்தாலியிலும் தமது பராமரிப்பில் இருந்த அறுபதுக்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல்களைச் செய்ததை ஆஸ்திரேலியர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் கிரிஃபித் மீதான 307 குற்றச்சாட்டுகளை நீதிபதி ஆண்டனி ராஃப்டர் இரண்டு மணி நேரத்துக்கு மேல் வாசித்தார். அங்கு பாதிக்கப்பட்ட சிறுமிகளும் அவர்களது குடும்பத்தினரும் திரண்டிருந்தனர் என்று ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனமான ஏபிசி கூறியது. ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத சிறுமிகள் தொடர்பான மோசமான பாலியல் செயல்களில் ஈடுபட்ட அந்த […]

ஐரோப்பா

ஆயுதங்களை வழங்கிய வடகொரியாவுக்கு பரிசாக குதிரைகளை வழங்கிய ரஷ்யா

உக்ரைன் உடன் போரிடுவதற்காக வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அதற்கு பரிசாக குதிரைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது. இது குறித்து தென் கொரியா தெரிவித்து இருப்பதாவது: ரஷ்யா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகையை சேர்ந்த 24 குதிரைகள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது […]

இலங்கை

அரச ஊழியர்களின் வேதன அதிகரிப்பு: வெளியான புதிய தகவல்

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பிலான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (02) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஜனவரி 1, 2025 முதல் அரச ஊழியர்களின் அடிப்படை வேதனம் 24 – 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது.

உலகம்

ஸ்டார்லைனரில் கேட்கும் வினோதமான சத்தங்கள் : விண்ணில் சிக்கியுள்ள வீரர்களின் நிலை என்ன?

  • September 2, 2024
  • 0 Comments

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஆகஸ்ட் 1, 2024 இல் செயல்படாத ஸ்டார்லைனர் கேப்ஸ்யூலில் இருந்து வரும் “வினோதமான சத்தங்கள்” குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மூத்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வசிப்பவர்கள், ராப் டேல் என்ற வானிலை நிபுணரால் முதலில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பதிவின் படி, ‘கிட்டத்தட்ட ஒரு சோனார் பிங் போன்ற துடிப்பு சத்தத்தை’ எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. இருப்பினும், முதல் முறையாக சத்தம் […]

பொழுதுபோக்கு

“எனக்கு தற்கொலை எண்ணம் வருகிறது..” விரக்தியின் உச்சத்தில் ஷாலின் சோயா

  • September 2, 2024
  • 0 Comments

சர்ச்சைக்குரிய யூடியூப்பராக வலம் வரும் டிடிஎப் வாசனின் காதலியான ஷாலின் சோயா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அண்மையில் இவர், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான, எடவேல பாபுவுடன் இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி பெரும் பேசுபொருளானதைத் தொடர்ந்த நிலையில், தற்போது ஷாலின் சோயா விளக்கம் அளித்துள்ளார். பாலியல் வழக்கு குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறது. அண்மையில் நடிகை மினு […]