ஐரோப்பா

ஜெர்மனி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வெளிவரும் தகவல்

  • September 5, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் ஆயுட்காலம் தொடர்பான புதிய புள்ளி விபரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் நீண்ட காலம் வாழ்வோரின் ஆயுட்காலம் அதிகரித்து வருவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்கள் சராசரியாக 78.6 ஆண்டுகள் வாழுவதாகவும், பெண்கள் சராசரியாக 88.3 ஆண்டுகள் வாழுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொவிட் வைரஸ் பரவலின் போது ஆயுட்காலம் குறைந்த நிலையில் இருந்த போதும், தற்பொழுது சீரான நிலமை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டு்ளளது. இதே காலப்பகுதியை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்களின் ஆயுடக் காலம் 0.6 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் 120 விடுதிகள் சோதனை

  • September 5, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் 120 விடுதிகளில் கழிவுநீர் சோதனையிடப்படுகின்றது. mpox தொற்றுத் தொடர்பில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. மனிதவள அமைச்சு, தேசியச் சுற்றுப்புற அமைப்பு, சுகாதார அமைச்சு ஆகியவை இணைந்து சோதனையை நடத்துவதாகச் சுகாதார அமைச்சர் Ong Ye Kung கூறினார். அவர் நேற்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சிங்கப்பூரின் தயார்நிலையைப் பற்றி விவரித்தார். வேலை அனுமதியில் சிங்கப்பூருக்குப் புதிதாக வருவோருக்கும் சுகாதாரப் பரிசோதனை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரின் பாலர் பாடசாலைகளிலும் ஏனைய பாடசாலைகளிலும் […]

ஆசியா

பெண்களை தவிர்க்கவும் – அழகான ஆண்களுக்கு சீன அரசாங்கம் விசேட எச்சரிக்கை

  • September 5, 2024
  • 0 Comments

சீனாவில் அழகான ஆண்கள், பெண்களிடமிருந்து தள்ளி இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டுத் தரப்புகளுக்கு வேவு பார்ப்பதற்கு எதிராக மாணவர்களை எச்சரிப்பதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக அழகான ஆண்களையோ, பெண்களையோ சந்திக்கும்போது எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளும்படி அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அவர்கள் வெளிநாட்டு உளவாளிகளாக இருக்கலாம். இரகசியத் தகவலைப் பெறக்கூடிய மாணவர்களை நாட்டுக்கு எதிராகச் செயல்பட வைப்பதற்கு அவர்கள் வசீகரமாக நடந்துகொள்ளலாம் என்று தேசியப் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வேலை விளம்பரங்கள், இணை தேடும் இணையத்தளங்கள் போன்றவற்றிலும் வெளிநாட்டு […]

இலங்கை செய்தி

இலங்கை அரசியலில் திருப்பம் – இன்று உதயமாகும் ரணிலின் புதிய கூட்டணி

  • September 5, 2024
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்துள்ள கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரமாண்ட கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இதன் அங்குரார்ப்பண நிகழ்வை இன்று நடத்த திட்டமிட்டுள்ளனர். கொழும்பு பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஹேஜ் இல் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளதுடன், இன்று காலை ரணிலை ஆதரிக்கும் அனைத்து எம்.பிகளும் இந்த நிகழ்வில் பங்குபற்றி உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு ரணில் விக்ரமசிங்கவின் தரப்பால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டணியின் தலைவர், செயலாளர் மற்றும் ஏனைய பதவிகள் குறித்த அறிவிப்புகளும் […]

செய்தி வட அமெரிக்கா

ஜார்ஜியா பள்ளி துப்பாக்கி சூடு – துப்பாக்கிதாரி குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்

  • September 4, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் ஜார்ஜியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 14 வயது மாணவர் என்றும், கொல்லப்பட்ட நான்கு பேரில் இருவர் சக மாணவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “இறந்தவர்களில், இருவர் மாணவர்கள் மற்றும் இருவர் பள்ளி ஆசிரியர்கள்” என்று ஜார்ஜியா புலனாய்வு பணியகத்தின் இயக்குனர் கிறிஸ் ஹோசி தெரிவித்துள்ளார். “துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவலில் இருக்கிறார், அவர் ஜார்ஜியா பள்ளியில் பயிலும் பதினான்கு வயது மாணவர்” என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐரோப்பா செய்தி

மின்னல் தாக்குதலில் சேதமடைந்த ரோமின் பண்டைய கான்ஸ்டன்டைன் வளைவு

  • September 4, 2024
  • 0 Comments

கடுமையான புயலின் போது ரோமின் பண்டைய கான்ஸ்டன்டைன் ஆர்ச் மின்னல் தாக்கியது, இதனால் சேதமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மின்னல் தாக்குதலை தொடர்ந்து “அனைத்து துண்டுகளும் மீட்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன” என்று கொலோசியம் தொல்பொருள் பூங்காவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். “சேத மதிப்பீடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன மற்றும் பகுப்பாய்வுகள் தொடர்கின்றன,” என்று அவர் மேலும் தெரிவித்தார். பொன்டே மில்வியோ போரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் 315 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வளைவு ஏற்கனவே […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்கர்களிடம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ்

  • September 4, 2024
  • 0 Comments

ஜார்ஜியா உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் அமெரிக்காவைத் தாக்கும் “துப்பாக்கி வன்முறையின் தொற்றுநோயை” நிறுத்துமாறு அமெரிக்கர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். நியூ ஹாம்ப்ஷயரில் நடந்த பேரணியில் பேசிய அமெரிக்க துணைத் தலைவர், தாக்குதல்-ஆயுதத் தடைக்கான தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார். ஜார்ஜியாவின் வின்டரில் உள்ள அபலாச்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு “ஒரு புத்தியில்லாத சோகம்” என்று தெரிவித்தார். “மேலும், நம் […]

ஐரோப்பா செய்தி

இத்தாலிய தீவில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் மீட்பு – 21 பேர் காணவில்லை

  • September 4, 2024
  • 0 Comments

லம்பேடுசா தீவில் பயணித்த படகு கவிழ்ந்ததில் 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 21 பேர் கடலில் காணாமல் போயுள்ளனர் என்று இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. தப்பியவர்கள் அனைவரும் சிரிய நாட்டவர்கள், லம்பேடுசாவிற்கு தென்மேற்கே சுமார் 10 கடல் மைல் (18.5 கிலோமீட்டர்) தொலைவில் மீட்கப்பட்டதாக காவல்படை தெரிவித்துள்ளது. இத்தாலியில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் (UNHCR) தலைவரான Chiara Cardoletti, உயிர் பிழைத்தவர்கள் “மோசமான” நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். உயிர் பிழைத்தவர்கள்,லிபியாவில் இருந்து […]

விளையாட்டு

சாதனை படைத்த ஆஸ்திரேலியா அணி

  • September 4, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்காட்லாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. […]

இலங்கை செய்தி

இலங்கை: அரச நில அளவையாளர்களுக்கு இடைநிறுத்தப்பட்ட சம்பளத்தை வழங்க ஒப்புதல்

  • September 4, 2024
  • 0 Comments

நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரச நில அளவையாளர்களுக்கு சம்பளம் வழங்க அரசாங்கம் தயார் என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அரச நில அளவையாளர்கள் சங்கம் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக உரிய சம்பளம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா, அரசாங்க நில அளவையாளர்களினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். இந்த மனு, […]