உலகம்

உக்ரைனுக்கு 650 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அனுப்ப உள்ள பிரித்தானியா

ரஷ்ய ஆளில்லா விமானங்கள் மற்றும் குண்டுவீச்சிலிருந்து நாட்டைப் பாதுகாக்க உதவும் வகையில், 162 மில்லியன் பவுண்டுகள் ($213.13 மில்லியன்) மதிப்புள்ள 650 இலகுரக பல-பயன் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முழு அளவிலான போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா கடந்த வாரம் உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது. ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள உக்ரைன் மேலும் வான் பாதுகாப்பு ஆதரவை […]

ஆசியா

மியன்மார் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 பேர் பலி!

  • September 6, 2024
  • 0 Comments

மியன்மார் ராணுவம் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ‌‌‌ஷான் மாவட்டத்தில் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கிளர்ச்சியாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின் 1 மணிவாக்கில் நம்காம் நகரில் உள்ள இரண்டு பகுதிகளில் ராணுவம் குண்டு போட்டதாக ‘டிஎன்எல்ஏ’ கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ராணுவத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும் 11 பேர் காயமடைந்ததாகவும் கிளர்ச்சியாளர்கள் கூறினர். உள்ளூர் அரசியல் கட்சியின் அலுவலகம் ஒன்று தரைமட்டமானது.உயிரிழந்தவர்களில் ஐவர் ஆண்கள், நான்கு […]

உலகம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து: 17 மாணவர்கள் உடல் கருகி பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யா- நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 14 மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உள்ளூர் நேரப்படி நள்ளிரவில் தீப்பிடித்தபோது விடுதியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர் தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் பள்ளி விடுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்து காயமடைந்த மாணவர்களை மீட்டனர். […]

பொழுதுபோக்கு

GOAT முதல்நாள் வசூல்… உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது

  • September 6, 2024
  • 0 Comments

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ள கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் படமாக கோட் உள்ளதால் இப்படத்திற்கு பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்களே வந்த வண்ணம் உள்ளன. பொதுவாக விஜய் படம் ரிலீஸ் ஆனால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இரண்டு விஷயம் தான். ஒன்று படத்தின் விமர்சனம், மற்றொன்று படத்தின் வசூல். அதன்படி கோட் திரைப்படம் முதல் நாளில் எத்தனை கோடி பாக்ஸ் ஆபிஸ் […]

பொழுதுபோக்கு

நடுங்கும் மலையாள திரையுலகம் – சிக்கினார் தமிழ் இயக்குனர்

  • September 6, 2024
  • 0 Comments

இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த திரையுலகமும் மிகவும் கூர்மையாக கவனித்து வரும் விஷயங்களில் ஒன்றாக இருப்பது, ஹேமா கமிட்டி விவகாரம்தான். பல நடிகைகள் தங்களுக்கு நடைபெற்ற, தாங்கள் எதிர்கொண்ட பாலியச் சீண்டல்கள் குறித்தும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் வெளியில் சொல்லி வருகின்றனர். அந்த வரிசையில் மலையாள படங்களில் நடித்து அதன் பின்னர் தமிழுக்கு அறிமுகமான நடிகை ஒருவர் தமிழ் பட இயக்குநர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மலையாளத்தில் அத்வைதம், நீலக்குறுக்கன் […]

இலங்கை

இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் என்பது அணிகளைத் தேர்ந்தெடுப்பது அல்ல: ரணில் விக்கிரமசிங்க

தமக்கு ஆதரவளிக்க உறுதியான அணி இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தல் என்பது தேசத்தை வழிநடத்தும் நபரைத் தேர்ந்தெடுப்பதே ஆகும். “ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் அணிகளைத் தெரிவு செய்யாதீர்கள். பொதுத் தேர்தலில் ஒரு நல்ல அணியைத் தெரிவு செய்யலாம். பொதுத் தேர்தலில் ஒரு நல்ல அணியை நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள் என்று மத்துகமவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார். “ஒரு ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவரை மட்டுமே பிரதமராக நியமிக்க வேண்டும். […]

ஐரோப்பா

உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு நேட்டோ சீனாவுக்கு வலியுறுத்தல்!

நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு சீனாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். மற்றும் போரின் தொடர்ச்சியில் பெய்ஜிங்கின் உதவி ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக உள்ளது என்றார். ஒஸ்லோவில் செய்தியாளர்களிடம் ஸ்டோல்டன்பெர்க் கூறுகையில், “உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு சீனா ஒரு தீர்க்கமான உதவியாளராக மாறியுள்ளது. “ரஷ்யா பயன்படுத்தும் பல ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு சீனா உதவுகிறது.” உக்ரேனில் பெய்ஜிங்கின் தொடர்ச்சியான போரைத் தூண்டுவது அதன் நலன்களையும் நற்பெயரையும் மோசமாக பாதிக்கும் என்று ஸ்டோல்டன்பெர்க் […]

ஆசியா

சீனக் குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்கத் தடை விதித்துள்ள அரசாங்கம்

  • September 6, 2024
  • 0 Comments

தங்கள் நாட்டுக் குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்கச் சீனா தடை விதித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக, பல்லாயிரக்கணக்கான குழந்தைகளைத் தத்துக்கொடுப்பதற்காகச் சீனா வெளிநாடுகளுக்கு அனுப்பியது. சீனாவில் மக்கள் தொகை உயர்ந்துகொண்டே இருந்ததால் அந்நாடு ஒரு தம்பதியருக்கு ஒரு குழந்தை கொள்கையைக் கடுமையாக்கியது. இதனால், அந்நாட்டில் பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், தற்போது வெளிநாட்டினருக்குத் தங்கள் நாட்டுக் குழந்தைகளை தத்துக்கொடுக்கச் சீனா தடை விதித்துள்ளது. மேலும், இத்தடை அனைத்துலக சட்டங்களுக்கு உட்பட்டது என்றும் […]

பொழுதுபோக்கு

ஆண் உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி, எலும்பு உடைக்கப்பட்டு கொடூர கொலை – நடிகரின் வெறிச்செயல்

  • September 6, 2024
  • 0 Comments

கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர் கொல்லப்பட்டது தொடர்பான குற்றப்பத்திரிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில், நெஞ்சு எலும்பு உடைக்கப்பட்டு, உடல் முழுவதும் 31 இடத்தில் பலத்த காயம் ஏற்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னட திரைப்பட நடிகர் தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும் மகனும் இருக்கும் நிலையில், அவரைவிட்டு பிரிந்து பவித்ரா கவுடாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். பவித்ரா கவுடா பற்றி சமூக வலைதளத்தில் ரேணுகசாமி என்கிற இளைஞர் மோசமாக […]

இலங்கை

இலங்கை: 5000 போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது

5000 போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் தெமட்டகொடையில் கைது செய்யப்பட்டுள்ளார் அக்குரஸ்ஸ, ஹெனேகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே, 62 ரூபாய் போலி நாணயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 ரூபாய் நோட்டுகள் என போலீசார் தெரிவித்தனர். தெமட்டகொட, வெலுவான பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.