அமெரிக்கா- கென்டக்கி நெடுஞ்சாலை துப்பாக்கிச்சூடு: அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள இனர்டர்ஸ்டேட் -75 நெடுஞ்சாலையில் துப்பாக்கிக்காரர் ஒருவர் பலரைச் சுட்டுக் காயப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறைந்தது ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர். தாக்குதல் காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்று கென்டக்கி மாநிலத்தின் லண்டன் நகர மேயர் ரென்டல் வெடல் தெரிவித்தார்.காயமடைந்தோர் தொடர்பாக அமெரிக்கக் காவல்துறை கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை. நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வனப்பகுதி அல்லது மேம்பாலத்தில் அந்தத் துப்பாக்கிக்காரர் மறைவாக இருந்து அங்கிருந்து பலரைக் குறிவைத்துத் துப்பாக்கியால் சுடுவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.துப்பாக்கிக்காரர் […]













