அறிவியல் & தொழில்நுட்பம்

ஜிமெயிலில் மறைந்திருக்கும் வசதிகள்!

  • September 9, 2024
  • 0 Comments

கூகுள் ஜிமெயில், கூகுள் போட்டோஸ், கூகுள் மீட் உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது. இதில் குறிப்பாக ஜிமெயில் அனைத்து பயனர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஜிமெயில் செயலியில், பல ட்ரிக்கள் உள்ளன. அதனை கண்டறிந்துவிட்டால், செயலி பயன்பாடு மிகவும் எளிதாகிவிடும். அதன்படி, இங்கு ஜிமெயில் டிப்ஸ் பற்றி பார்ப்போம். தேவையில்லாமல் உங்களுக்கு வரும் மெயில்களை மியூட் செய்திட முடியும். மெயிலை செலக்ட் செய்துவிட்டு, இன்பாக்ஸ் […]

ஆசியா

சீனாவை தொடர்ந்து வியட்நாமை உலுக்கிய புயல் – பலர் பலி

  • September 9, 2024
  • 0 Comments

வியட்நாமை புயல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். தென் சீனாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய யாகி புயல், வியட்நாமை தாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்களும், ஏராளமான மின்கம்பங்களும் முறிந்து வீழ்ந்தன. வடக்கு வியட்நாமில் மின்சாரம் தடை பட்டதால் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாக வியட்நாம் அரசு தெரிவித்தது. நெல், கரும்பு போன்ற ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட விளைநிலங்களும் பாதிக்கப்பட்டதாகவும் கூறியது. வணிக நிறுவனங்களின் விளம்பர போர்டுகள், பெயர் பலகைகளும் சேதம் அடைந்தன.

இலங்கை செய்தி

இலங்கையில் மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கதி

  • September 9, 2024
  • 0 Comments

  தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடகம்மெத்த பகுதியில் மனைவி கணவனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் உடகம்மெத்த, கொமகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, மனைவி இரும்புக் கம்பியால் கணவனை தாக்கி கொலை செய்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் […]

உலகம்

செங்கடலில், 3 வாரங்களாக தீப்பிற்றி எரியும் கப்பல் – ஆபத்து குறித்து அமெரிக்கா எச்சரிக்கை

  • September 9, 2024
  • 0 Comments

செங்கடலில், 3 வாரங்களாக தீப்பிற்றி எரிந்துவரும் சரக்கு கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்துள்ளது. இது மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உடன், இஸ்ரேல் துறைமுகம் நோக்கி சென்ற கிரேக்க சரக்கு கப்பல் மீது கடந்த 21-ஆம் தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். வரலாற்றில் மிகப்பெரிய எண்ணெய் கசிவு நேர்வதை தடுக்க, ஐரோப்பிய கடற்படை பாதுகாப்புடன், இழுவை படகுகள் மூலம் சரக்கு […]

இலங்கை செய்தி

இலங்கையில் English For All திட்டத்தை அமுல்படுத்த தயாராகும் ரணில்

  • September 9, 2024
  • 0 Comments

ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் ஆங்கிலக் கல்வியை வழங்குவதற்கான வெள்ளை அறிக்கையை கொண்டு வந்த போது மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பினால் பெருமளவிலான இளைஞர்கள் ஆங்கிலக் கல்வியை இழந்துள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டு இளைஞர் சமூகம் சார்பில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் விரிவுரையாளர்களை மக்கள் விடுதலை முன்னணி கொன்றுள்ளதாகவும், அவர்களின் செயற்பாடுகளால் இந்த நாட்டில் கல்வித்துறையில் 10 வருட பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் […]

விளையாட்டு

SLvsENG Test – இலங்கை அணிக்கு 219 ஓட்டங்கள் இலக்கு

  • September 8, 2024
  • 0 Comments

சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Jamie Smith அதிகபட்சமாக 67 ஓட்டங்களையும், Dan Lawrence 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Lahiru Kumara […]

ஆப்பிரிக்கா செய்தி

நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் லாரி மீது மோதியதில் 48 பேர் பலி

  • September 8, 2024
  • 0 Comments

வட-மத்திய நைஜீரியாவில் லாரி மீது எரிபொருள் டிரக் மோதியதில் 48 பேர் கொல்லப்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் சென்ற டிரக் மீது எரிபொருள் டிரக் மோதியதாக வட-மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள மாநில அவசர மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பல வாகனங்களும் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஜென்சியின் செய்தித் தொடர்பாளர் ஹுசைனி இப்ராஹிம் இறந்தவர்களின் எண்ணிக்கை 48 என்று தெரிவித்துள்ளார்

உலகம் செய்தி

அல்ஜீரியாவின் அதிபராகத் அப்தெல்மட்ஜித் டெபோன் மீண்டும் தெரிவு

  • September 8, 2024
  • 0 Comments

அல்ஜீரியாவின் தற்போதைய 78 வயது ஜனாதிபதி அப்தெல்மட்ஜித் டெபோன், ஒரு உறுதியான வாக்களிப்புடன் மீண்டும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக, நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. “பதிவு செய்யப்பட்ட 5,630,000 வாக்காளர்களில், 5,320,000 பேர் சுயேட்சை வேட்பாளர் அப்தெல்மட்ஜித் டெபவுனுக்கு வாக்களித்துள்ளனர், இது 94.65 சதவிகிதம்” என்று நடந்த வாக்குகளில் தேசிய சுதந்திர ஆணையத்தின் (ANIE) தலைவர் முகமது சார்ஃபி தலைநகர் அல்ஜியர்ஸில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இராணுவ ஆதரவு பெற்ற டெபோன் போட்டியாளர்களில் 3 சதவீத வாக்குகளை வென்ற பழமைவாத […]

ஐரோப்பா செய்தி

இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிராக இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம்

  • September 8, 2024
  • 0 Comments

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் குழுவினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை மனித உரிமைகளை மீறிய நாடு என்பதால் இலங்கை கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இதன்போது அவர்கள் வலியுறுத்தினர். இலங்கையில் தங்களின் தமிழ் சமூகத்துக்கு உரிமை இல்லை […]

இலங்கை செய்தி

இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய இலங்கையின் சுற்றுலா வருமானம்

  • September 8, 2024
  • 0 Comments

2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக நாட்டின் மத்திய வங்கியின் சமீபத்திய தரவு காட்டுகிறது. மேற்படி காலப்பகுதியில் இலங்கை 2.17 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது, இது 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 66.1 வீத அதிகரிப்பாகும் என மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதே காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 50.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது, மேலும் 2024 ஆம் ஆண்டின் முதல் […]