மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ஜெய்சங்கர்!
13ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரப் பகிர்வை கொண்டுவர மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்க உறுப்பினர்களுக்கும், நாட்டில் உள்ள அரசியில் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் காணொலி மூலம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா செயல்படுவதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான வளமான எதிர்காலத்திற்காக […]













