ஐரோப்பா

பிரான்ஸில் சிறுவன் கொலை – விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற சம்பவ இடத்துக்கு மருத்துவக்குழுவினர் வந்தடையும் முன்னரே சிறுவன் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்செயின் (Marseille) 14 ஆம் வட்டாரத்தில் இத்துப்பாக்கிச்சூட்டு அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வைத்து ஆயுதாரிகளால் சரமாரியாக சுடப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவன் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புபட்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி குற்றச்சாட்டில் இருமுறை அவன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்