ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது
ஊழல் வழக்கில் தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் புலனாய்வு காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்தியாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்கே ஹாலில் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணியளவில் […]













