இலங்கை

கட்டுநாயக்கவில் போலி விசா மூலம் இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் கைது

போலியாக தயாரிக்கப்பட்ட விசா மூலம் இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்த இளைஞர் ஒருவர் நேற்று (8) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 06.40 மணிக்கு கத்தாரின் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-217 இல் பயணிப்பதற்காக குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.அங்கு குறித்த இளைஞன் தனது அனுமதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விமான நிலையத்தில் சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் குடிவரவு, குடியகல்வு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனையில், குறித்த இளைஞன் தம்வசம் வைத்திருந்த போலாந்து குடியுரிமை விசா போலியாக தயாரிக்கப்பட்டது என்பது உறுதியானது.பின்னர் குறித்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி விசா 40 இலட்சம் ரூபாய்க்கு ஒரு தரகரிடமிருத்து தான் பெற்றுக்கொண்டதாக அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞன் பயணத்திற்காக எடுத்துவந்த , பயணப் பை மற்றும் கைப்பையை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.இதன்போது, குறித்த இளைஞனிடம் இருந்த கைப் பையில் மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட சில ஆவணங்களும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.இதனையடுத்து,குறித்த இளைஞனைக் கைது செய்த குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவு அதிகாரிகள், அந்த இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்