ஐரோப்பா

உக்ரைன் தலைநகர் கீவ் மீது டிரோன் தாக்குதல் – ஒருவர் படுகாயம்

  • September 10, 2023
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளன. நள்ளிரவு நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக வானில் சுமார் 2 மணி நேரத்திற்கு புகை மண்டலம் சூழ்ந்ததாக கூறப்படுகிறது. கீவ் நகரின் மீது சுமார் 5 முறை குண்டுகள் வீசப்பட்டதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் காரணமாக டார்னிட்ஸ்கி, சோலோமியான்ஸ்கி, போடில் உள்ளிட்ட பகுதிகளின் சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக கீவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த […]

இலங்கை

மஞ்சள் காமாலை தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு!

  • September 10, 2023
  • 0 Comments

அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு போதுமான காண்டாக்ட் லென்ஸ்கள் கையிருப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக மருத்துவ வழங்கல் துறையிடம் கான்டாக்ட் லென்ஸ்கள் இல்லை என பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “அவ்வாறான சூழ்நிலை இல்லை எனவும், மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் தரவு அமைப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக கையிருப்பு தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதேவேளை, மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசிகள் அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டு […]

வட அமெரிக்கா

அமெரிக்கவில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் துப்பாக்கிக்கு தடை!

  • September 10, 2023
  • 0 Comments

துப்பாக்கி வன்முறையை தவிர்க்க நியூ மெக்சிகோ மாகாண கவர்னர் புதிதாக நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 6 திகதி அங்குள்ள அல்புகெர்கி பகுதியின் கூடைப்பந்து மைதானத்துக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இதுபோன்ற துப்பாக்கி வன்முறையை தவிர்க்க நியூ மெக்சிகோ மாகாண கவர்னர் புதிதாக நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். […]

பொழுதுபோக்கு

‘தளபதி 68’ படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட் வெளியானது

  • September 10, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘தளபதி 68’ என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் […]

உலகம்

அலாஸ்கா கடற்கரை பகுதியில் இனங்காணப்பட்டுள்ள மர்மப் பொருள்!

  • September 10, 2023
  • 0 Comments

அலாஸ்கா கடற்கரை அருகே பசிபிக் பெருங்கடலில் ஆய்வில் ஈடுபட்ட ஆய்வுக் குழுவொன்று  தங்க முட்டை போன்ற பொருளைக் கண்டுபிடித்துள்ளது. இறந்த எரிமலை தொடர்பாக அலாஸ்காவிற்கு அருகில் உள்ள கடலில் “Seascape Alaska 5 Expedition” என்ற ஆய்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 30 ஆம் திகதி குறித்த மர்மப் பொருள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தங்க முட்டை போன்ற பொருள் சுமார் 10cm அல்லது 4 அங்குல விட்டம் கொண்டதாகவும் அதன் கீழ் ஒரு […]

ஆரோக்கியம்

அசிடிட்டியை உண்டாக்கும் 5 கூடாத காலைப் பழக்கங்கள்!

  • September 10, 2023
  • 0 Comments

அசிடிட்டி என்பது ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாகும், இது உங்கள் நாளை சீர்குலைத்து அசௌகரியத்தை ஏற்படுத்தும். அசிடிட்டிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நமது அன்றாட பழக்கவழக்கங்களில் சில, குறிப்பாக காலை பழக்கவழக்கங்கள் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. எனவே இன்று காலை நேரத்தில் அசிடிட்டியை உண்டாக்கும் சில பொதுவான கூடாத பழக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். பின்வரும் புள்ளிகள் மூலம் இந்த 5 பழக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், 1. காலை உணவைத் தவிர்ப்பது: பலர் சமச்சீரான காலை […]

இந்தியா

வரதட்சணை கேட்டு மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்..! கைது செய்த பொலிஸார்

  • September 10, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை கிணற்றில் தள்ளிய கணவரை பொலிஸார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் தனது மனைவியிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு மனைவியை கயிற்றில் கட்டி, கிணற்றில் தள்ளி சித்ரவதை செய்துள்ளார். இந்த சம்பவம் நடந்து 25 நாட்களுக்குப் பின்னர் தான் தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த சித்ரவதை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போதுதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

பொழுதுபோக்கு

”நா ரெடியா வரவா” பாடலில் சில வரிகள் நீக்கம்!

  • September 10, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த படம் வரும் ஒக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடத்தப்படும் என இரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வந்த ”நா ரெடியா வரவா” பாடலில் சில மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சென்சார் போர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் மது பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறி […]

பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகும் லோகேஷ்

  • September 10, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், புதிய படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். குறைவான பட்ஜெட்டில் வெளியான தமிழ் படங்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த படங்களுள் ஒன்று, மேயாத மான். இந்த படத்தை இயக்கியவர், ரத்ன குமார். கோலிவுட்டின் தற்போதைய ட்ரெண்டிங் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதை ஆசிரியர்கள் குழுவில் இவரும் ஒருவர். லோகியின் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, அமலா பாலை வைத்து ஆடை […]

இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மூலம் முஸ்லிம் சமூகத்தின் உயிரோட்டத்தைப் பறித்துவிட்டார்கள் – முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர்

  • September 10, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உயிரோட்டத்தைப் பறித்தார்கள். இயலாத நிலையில் இறைவனிடமே கையேந்தினோம் இப்பொழுது நீதிக்கான வழிகள் திறக்கின்றன என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார். அஸிஷா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் ஏறாவூர் முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாசலில் இன்று (10) இடம்பெற்ற நிகழ்வில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்பதையொட்டி சுமார் 220 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் […]