ஐரோப்பா

உக்ரைன் தலைநகர் கீவ் மீது டிரோன் தாக்குதல் – ஒருவர் படுகாயம்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளன. நள்ளிரவு நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக வானில் சுமார் 2 மணி நேரத்திற்கு புகை மண்டலம் சூழ்ந்ததாக கூறப்படுகிறது. கீவ் நகரின் மீது சுமார் 5 முறை குண்டுகள் வீசப்பட்டதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல் காரணமாக டார்னிட்ஸ்கி, சோலோமியான்ஸ்கி, போடில் உள்ளிட்ட பகுதிகளின் சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக கீவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து கீவ் நகர மேயர் விடாலி கிலிட்ஸ்கோ கூறுகையில், ரஷ்ய படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த புதன்கிழமை கோஸ்டியாண்டினிவ்கா என்ற பகுதியில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்